Cinema
“மிஸ் பண்ணாதீங்க..!” - புதிதாக வெப் சீரிஸ் பார்ப்பவர்களுக்கான மினி சீரிஸ் பரிந்துரைகள்!
ஊரடங்கு காலத்தில் நிறைய பேர் சினிமா பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சிலர் Money Heist, Dark போன்ற வெப் சீரிஸ்களை பார்த்து வெப் சீரிஸ் மீதும் மோகம் கொண்டனர். பலரும் சில நல்ல வெப் சீரிஸ்களை அதிக எபிசோடுகள் இருப்பதைக் கண்டு பயந்து பார்க்காமல் தவிர்த்திருப்போம். அவர்களுக்காக இரண்டு சீசன்களுக்கு மிகாமல் இருக்கும் வெப் சீரிஸ்கள் சிலவற்றை இந்தத் தொகுப்பில் காணலாம்.
Chernobyl (2019)
(Disney+Hotstar)
Season :1, Episodes :5
1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சோவியத் ஒன்றியத்தில் அமைந்துள்ள செர்னோபில் நகரத்தில் நடந்த மோசமான அணுப் பேரழிவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது இந்த வெப் சீரிஸ். செர்னோபிலில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தின் மைய உலை வெடித்து அணுக்கதிர்கள் வெளியேறுகின்றன. அதன் அருகில் சென்றாலே எலும்பு கூட மிஞ்சாத அளவு வீரியம் கொண்டதாக இருக்கின்றது.
மனித தவறால் நடந்த இந்த விபத்து, சில தியாக உள்ளம் கொண்ட மனிதர்களால் சரி செய்யப்படுகின்றது. ஐந்து எபிசோடுகளை கொண்டுள்ள இந்த வெப் சீரிஸில், இந்த விபத்து நடை பெற்றதையும், அதில் உள்ள அரசியல் தவறுகளையும், மனிதத்தின் உன்னதத்தையும் மக்களுக்கு கொண்டுசேர்ப்பதாக அமைந்துள்ளது.
After Life (2019)
(Netflix)
Seasons :2 , Episodes :12
டோனி தன் மனைவி லிசாவுடன் வாழ்ந்து வருகிறார். அவர்களது அழகிய வாழ்க்கையில் இடி போல் வந்து விழுகிறது லிசாவிற்கு ஏற்பட்ட புற்றுநோய். சில காலத்தில் லிசா இறந்துவிடுகிறால், அந்தப் பிரிவில் இருந்து வெளிவரமுடியாமல் சாகும் எண்ணத்தில் டோனி இருக்கிறார். அவரின் நண்பர்கள் மற்றும் அவரை சுற்றியுள்ள மக்கள் அவர் வாழ்வதற்கு காரணமாக மாறுகின்றனர்.
டார்க் காமெடி வகை சீரிஸ் ஆன இது, பல இடங்களில் சிரிக்க வைத்தும், அடுத்த நொடியே கலங்க வைத்தும் விடுகிறது. லிசா இறப்பதற்க்கு முன்னால் டோனிக்காக நினைவூட்டல் வீடியோவை கொடுத்திருப்பாள். அந்த வீடியோ இடம்பெறும் காட்சிகள் சோகத்தின் உச்சமாக அமைந்துள்ளது.
Sex Education (2019)
(Netflix )
Seasons :2, Episodes :16
பாலியல் சிகிச்சையாளரான ஜீன், தன் மகன் ஓடிஸுடன் வாழ்ந்து வருகிறாள். ஓடிஸ் 'ஹை ஸ்கூல்' மாணவனாக இருக்கிறான். அங்கு மேவ் என்ற பெண்ணின் மீது நட்பு கொண்டு, பின் அது காதலாக மாறுகிறது. ஆனால் ஜாக்சன் என்ற வேறொரு மாணவன் உடன் மேவ் காதலில் இருக்கிறாள்.
இப்படியே நாட்கள் செல்ல, ஓடிஸ் அவனது நண்பன் ஒருவனுக்கு பாலியல் அறிவுரை அளிப்பதை மேவ் பார்த்துவிடுகிறாள். அதனை அவர்களது பள்ளியில் ஒரு ரகசிய வேலையாக செய்ய ஓடிஸிடம் ஒப்பந்தம் செய்து கொள்கிறாள். பின் ஸ்கூலில் பாலியல் குருவாக ஓடிஸ் மாறுகிறான். இந்த காலத்தில் இளைஞர்களின் பாலியல் சந்தேகங்களுக்கு விடை அளிப்பதாக இந்த சீரிஸ் அமைகிறது. நட்பு, பெண்ணியம் என்று பல்வேறு தலைப்புகளையும் மேலோட்டமாக தீண்டிவிட்டுச் செல்வதாகவும் அமைந்திருக்கிறது.
Kingdom (2019)
(Netflix )
Seasons :2, Episodes :12
சீனாவில் ஒரு பகுதியை ஆண்டு வந்த பேரரசர் இறந்து விடுகிறார். அவரது இரண்டாவது மனைவியும், போர்ப்படை தளபதியின் மகளுமான மகாராணி கர்ப்பமாக இருக்கிறாள். மகாராணிக்கு ஆண் பிள்ளை பிறக்கவேண்டும், அதுவரை அரசர் உயிரோடு இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் இளவரசர் பட்டம் மூத்த பிள்ளைக்கு செல்லாமல், தன் மகளுக்குப் பிறக்கின்ற பிள்ளைக்கு செல்வதாக அமையமுடியும் என்று தளபதி சதி செய்கிறார். அதனால், சாகாவரம் கொடுக்கக்கூடிய ஒரு மூலிகையை அந்நாட்டு மருத்துவரை வைத்து உருவாக்கி அதனை அரசருக்கு அளிக்கின்றனர். ஆனால் அது அரசரை மனிதர்களைத் தின்னும் மிருகமாக மாற்றிவிடுகிறது.
இந்த விஷயம் முதல் மகனுக்குத் தெரிந்துவிடுகிறது. அரண்மனையை விட்டுட்டு தப்பித்து சென்று. மக்களிடையே இதுகுறித்து பிரச்சாரம் செய்யவேண்டும் என்று கிளம்புகிறார். ஆனால் அதன் பின் தான் தெரிகிறது. அரசருக்கு இருக்கும் வியாதி மக்களில் பலருக்கு பரவத்தொடங்கிவிட்டதென்று. பின், இதில் இருந்து மக்கள் எவ்வாறு தப்பிக்கின்றனர், அரசரின் முதல் மகனை மக்கள் இளவரசராக எப்படி ஏற்றுக் கொள்கின்றனர் என்பது தான் இந்த சீரிஸின் கதை.
You (2018)
(Netflix )
Seasons :2, Episodes :20
காதலுக்காக ஒரு மனிதன் எந்த ஒரு காரியத்தையும் செய்வான் என்பது இந்த சீரிஸின் கருவாக அமைகிறது. ஜோ என்னும் இளைஞர் அவரின் காதலியை பின்தொடர்ந்து செல்வதும், அவளை அடைய அவர் செய்யும் முயற்சிகளும் தான் இந்த சீரிஸின் கதை. கொடூர நிகழ்வுகளும் என நினைத்து பார்க்க முடியாதவைகளாக இருக்கின்றது.
இந்த சீரிஸின் கதை சொல்லியாக ஜோ திகழ்கிறார். அவரின் கதை சொல்லும் போக்கு ரசிகர்களை கதையோடு ஒன்றிப்போக வைக்கும் விதமாக அமைகிறது. இரண்டு சீசன்கள் கொண்ட இந்த சீரிஸ், காதல், காமம், கொடூரம் என்று வித்தியாசமான ஒரு நடையில் உருவாக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!