சினிமா

‘டார்க்’, ‘மணி ஹெய்ஸ்ட்’ இருக்கட்டும்... தமிழில் வெளிவந்த முன்னோடி வெப் சீரிஸ்களை பார்த்திருக்கிறீர்களா?

தமிழில் பலராலும் பேசப்படாத ஆரம்பகால வெப்சீரிஸ்களை இந்தத் தொகுப்பில் காணலாம்.

‘டார்க்’, ‘மணி ஹெய்ஸ்ட்’ இருக்கட்டும்... தமிழில் வெளிவந்த முன்னோடி வெப் சீரிஸ்களை பார்த்திருக்கிறீர்களா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Subash Chandra Bose
Updated on

ன்னதான் வெள்ளித் தட்டிலும், வெள்ளிக் கரண்டியிலும் சாப்பிடக் கற்றுக்கொண்டாலும், நம் பண்பாட்டின்படி வாழை இலையில் மிளகு ரசத்தை ஊற்றித் தரையில் சிந்த விடாமல் சாப்பிடும் சுகம், அலாதி ஆனந்தத்தை தரும். அவ்வாறு ‘டார்க்’, ‘மணி ஹெய்ஸ்ட்’, போன்ற அயல்நாட்டு வெப்சீரிஸ்களைக் கண்டு நாம் ‘ஆஹா ஓஹோ’ என்று முகநூலிலும், நண்பர்களிடமும் பிதற்றிக்கொண்டாலும், தமிழில் நம்மவர்கள் செய்த சிறிய முயற்சியையும் பாராட்ட மறந்தோம். தமிழில் பலராலும் பேசப்படாத ஆரம்பகால வெப்சீரிஸ்களை இந்தத் தொகுப்பில் காணலாம்.

"As I'm Suffering From Kadhal" (2017)

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், போன்ற காதலின் தனித்துவத்தை வித்தியாசமான நடையில் எழுதியும் இயக்கியும் இருந்த 'பாலாஜி மோகன்' இந்த வெப்சீரிஸையும் எழுதி இயக்கியது மட்டுமின்றி, நடித்தும் உள்ளார். 2017 ஆம் ஆண்டு, ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் என்னும் OTT தளத்தின் வாயிலாக மக்களை சென்றடைந்தது இந்த வெப்சீரிஸ்.

‘டார்க்’, ‘மணி ஹெய்ஸ்ட்’ இருக்கட்டும்... தமிழில் வெளிவந்த முன்னோடி வெப் சீரிஸ்களை பார்த்திருக்கிறீர்களா?

நான்கு காதலர்களின் வாழ்க்கை; அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், கல்யாண பந்தமின்றி வாழ நினைக்கும் முற்போக்கு காதலர்களின் "லிவிங் டுகெதர்" உள்ளிட்ட நவீன கால காதலின் பரிணாம வளர்ச்சியை பற்றிப் பேசியது இந்த சீரிஸ். பாலாஜி மோகனின் As I'm Suffering From kadhal தமிழ் வெப்சீரிஸ்களின் வெற்றிகரமான தொடக்கப் புள்ளி எனலாம்.

Livin' (2017)

தலைப்பிலேயே இந்த வெப்சீரிஸ் பேசப் போகும் விஷயம் தெரிந்துவிடும். ஆனால் அவ்வாறான கருத்துகள் எதையுமே இது பேசவில்லை என்பதே உண்மை. ஒன்றாக, ஒரே அறையில் உறங்கி, ஒரே வீட்டில் தாலி என்னும் கயிற்றின் கட்டுப்பாட்டில் இல்லாமல் வாழும் இரு காதலர்களின் கதையே இந்த வெப்சீரிஸ். Put Chutney என்னும் யூட்யூப் சேனல் வழியாக இதனை வெளியிட்டார்கள், பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கிய இந்த 'லிவின்' பார்ப்பவர்கள் மனதை லேசாக்கும்.

போட்டோகிராபி ஸ்டூடியோ வைத்திருக்கும் ஒரு நடுத்தர குடும்பத்து இளைஞன், Hi - Fi வாழ்க்கை வாழும் பெண்ணின் மீது காதல் கொண்டு தன் அம்மாவிற்கும் அக்காவிற்கும் இந்த லிவிங் டுகெதரை தெரியாதவாறு மறைத்து வாழ்கிறான். இவர்களிடையே நண்பனாக வரும் சாம், தன் தலையில் இடியே விழுந்தாலும் அதிர்ச்சி ஆகாத ஒரு subtle ஆன கதாபாத்திரமாக வலம் வருகிறார்.

‘டார்க்’, ‘மணி ஹெய்ஸ்ட்’ இருக்கட்டும்... தமிழில் வெளிவந்த முன்னோடி வெப் சீரிஸ்களை பார்த்திருக்கிறீர்களா?

அம்ருதா ஸ்ரீனிவாசன் மற்றும் கண்ணா ரவி ஆகியோர் நாயகனாகவும் நாயகியாகவும் நடித்திருந்தாலும், அவர்களைத் தாண்டி தன் கதாபாத்திரத்தை அழகாகச் செய்திருந்தார் சாம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த நவீன். 13 எபிசோடுகளை கொண்ட இந்த வெப்சீரிஸ் ஒரே நேரத்தில் பார்த்து முடித்துவிடக்கூடிய நேரஓட்டத்தையே கொண்டது.

Breathe (2018)

நுரையீரல் பிரச்சனையால் இன்னும் 6 மாத காலமே வாழ்நாள் கொண்ட தன் மகனின் உயிரைக் காக்க தீமையின் எந்த எல்லைக்கும் போகும் தந்தையின் கதையே இந்த ‘Breathe’ வெப்சீரிஸ். அமேஸானில் வெளியான இந்த வெப்ஸீரிஸை மயங் ஷர்மா இயக்கத்தில் மாதவன் நடித்துள்ளார். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் இது வெளியாகி இருந்தது.

‘டார்க்’, ‘மணி ஹெய்ஸ்ட்’ இருக்கட்டும்... தமிழில் வெளிவந்த முன்னோடி வெப் சீரிஸ்களை பார்த்திருக்கிறீர்களா?

த்ரில்லர் வகை கதைகளில் இது தனித்துவமானது. ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கும்படியாக கட்டமைக்கப்பட்டிருந்தது. தன் மகன் மூச்சுத்திணறலில் துடிக்கும்போது அந்தத் துயரத்தை தாங்க முடியாமல் தவிக்கும் தந்தையாகவும், தன் மகனின் உயிரைக் காப்பாற்ற ஒரு கொலைகாரனாக ஆக்ரோஷத்திலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மாதவன்.

நிலா நிலா ஓடிவா (2018)

காட்டுத்தனமாக காதலிப்பவர்கள் மத்தியில், ஒரு காட்டேரியை காதலித்து அவதிப்படும் ஒருவனின் காதல் கதை தான் 'நிலா நிலா ஓடிவா' வெப்சீரிஸ். தமிழில் விரல் விட்டு எண்ணத்தகுந்த பெண் இயக்குனர்களே இருக்கிறார்கள், அவர்களுள் பெரிதும் பேசப்படாத இயக்குனரான நந்தினியின் இயக்கத்தில் சுனைனா மற்றும் அஸ்வின் ஆகியோர் நடிப்பில் உருவானது இந்த வெப்சீரிஸ். Viu என்னும் OTT தளத்தில் இது காணக்கிடைக்கும்.

‘டார்க்’, ‘மணி ஹெய்ஸ்ட்’ இருக்கட்டும்... தமிழில் வெளிவந்த முன்னோடி வெப் சீரிஸ்களை பார்த்திருக்கிறீர்களா?

டாட்டூ கலைஞரான ஓம் (அஷ்வின்) ஒரு நாள் எதிர்பாராத விதமாக தன் கல்லூரி கனவு காதலியான நிலாவை (சுனைனா ) காண்கிறான், இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது, பின் ஒருநாளில் நிலா தான் ஒரு காட்டேரி என்கின்ற உண்மையை ஓமிடம் சொல்கிறாள், அவளை சாதாரண மனிதராக மாற்ற நடக்கும் கலாட்டாக்களும், கண்ணீருமே கதை. பெண் இயக்குனர்களின் பார்வையில் காதல் எப்போதுமே மற்ற காதல் கதைகளை விடவும் தனித்துவம் பெறும். அதனை இந்த வெப்சீரிஸில் காணலாம்.

Back To School (2018)

மண்வாசம் மாறாமல் இயங்கிக்கொண்டிருக்கும் யூட்யூப் சேனல் 'நக்கலைட்ஸ்'. இதில் நிறைய மினி சீரிஸ்கள் வெளிவந்தாலும், Back to school சீரிஸிற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பள்ளிப் பருவத்தைக் கடந்து வந்த அனைவருக்குமே தங்கள் பள்ளி வாழ்க்கையையே ஒரு கணம் கண்முன் காட்டிவிடும் இந்த வெப்சீரிஸ். நிஜந்தனின் எழுத்தில், ராஜேஸ்வர் இந்த சீரிஸை இயக்கியுள்ளார். 10 எபிசோடுகளையும் ஒவ்வொரு பாடப்பிரிவாக பிரித்து கையாண்ட விதம் சிறப்பு.

‘டார்க்’, ‘மணி ஹெய்ஸ்ட்’ இருக்கட்டும்... தமிழில் வெளிவந்த முன்னோடி வெப் சீரிஸ்களை பார்த்திருக்கிறீர்களா?

இதில் நடித்தவர்களை முன்பே சில வீடியோக்களில் நாம் பார்த்திருந்தாலும், இந்த சீரிஸில் அதன் சாயல் எதுவுமின்றி தங்களின் நடிப்பை வெளிப்படுத்தியிந்தனர். 'அம்முச்சி', 'அலும்புநாடீஸ்' போன்ற சிறப்பு மிக்க வெப்சீரிஸ்களும் இவர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories