தமிழ்நாடு

“தணிக்கை வாரியத்தை கூட்டணியில் சேர்த்து கொண்ட பா.ஜ.க” : அமைச்சர் ரகுபதி பேட்டி!

2026 தேர்தலில் தி.மு.க கூட்டணி தான் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

“தணிக்கை வாரியத்தை கூட்டணியில் சேர்த்து கொண்ட பா.ஜ.க” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

“பா.ஜ.க-வின் கூட்டணியில் தற்போது தணிக்கை வாரியமும் சேர்ந்துள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ ஆகியவை உள்ள நிலையில், தற்போது தணிக்கை வாரியமும் அந்தக் கூட்டணியில் இணைந்துள்ளது" என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இது புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி,"“பாஜகவின் புதிய கூட்டணியாக தணிக்கை வாரியமும் சேர்ந்துள்ளது. ஏற்கனவே அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ ஆகியவை உள்ள நிலையில், தற்போது தணிக்கை வாரியமும் அந்தக் கூட்டணியில் இணைந்துள்ளது.

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததற்கு திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தணிக்கை வாரியத்தின் இந்த நடவடிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

நாங்கள் சொல்வதை பா.ஜ.க கேட்கும் என்று நம்பினால் அவர்களைப் போல முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது ஆளுநர் ஆர்.என். ரவி என்ன செய்யப்போகிறார் என்பதைத் தமிழ்நாடு பார்க்கத்தான் போகிறது. அரசியலமைப்புச் சட்டப்படி நடந்துகொள்ளப் போகிறாரா? அல்லது விஷமத்தனத்துடன் செயல்படப் போகிறாரா? என்பது அன்று தெரிந்துவிடும்.

தமிழ்நாட்டில், யார் எந்த கூட்டணி அமைத்தாலும் சரி திமுக கூட்டணி தான் வெற்றி பெறபோகிறது. மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தான் அமரப்போகிறார். இதை யாராலும் தடுக்க முடியாது. மாற்ற முடியாது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories