Cinema
பார்வையற்றவராக உதயநிதி ஸ்டாலின்... மிஷ்கின் இயக்கத்தில் மிரட்டும் ‘சைக்கோ’ டீசர்!
உதயநிதி ஸ்டாலின், நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். உதயநிதி நடிப்பில் வெளியான ‘மனிதன்’, ‘நிமிர்’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், கடைசியாக சீனு ராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ படத்தில் நடித்திருக்கிறார். மிஷ்கின் கடைசியாக விஷாலை வைத்து ‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
‘சைக்கோ’ படத்தில் நித்யா மேனன், அதிதி ராவ், இயக்குநர் ராம் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படதிற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டீஸர் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, சற்று முன்பு ‘சைக்கோ’ படத்தின் டீஸரை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!