Cinema
பிரபல இயக்குனர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்
தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குனர் மகேந்திரன்.சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் மகேந்திரன்,சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.மகேந்திரனின் மகன் ஜான் பிரதீப் அவரது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
மகேந்திரன் இயக்கிய "உதிரிபூக்கள் " திரைப்படம் இன்றளவில் சிறந்த படங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.இவர் ரஜினி வைத்து முள்ளும் மலரும்,ஜானி,கை கொடுக்கு கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.விஜய் நடிப்பில் வெளியான தெறி ,ரஜினி நடித்த பேட்ட,விஜய்சேதுபதியின் சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தார்.மகேந்திரனின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகினறனர்.
Also Read
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!