உலகம்

கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா… உலக நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் - பின்னணி?

வெனிசுலாவை கைப்பற்றிய அமெரிக்கா தற்போது கிரீன்லாந்தை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது. அமெரிக்காவிற்கு கிரீன்லாந்து தேவை என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார் ட்ரம்ப்.

கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா… உலக நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் - பின்னணி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

எண்ணெய் வளம் மிகுந்த நாடாக விளங்கி வந்த வெனிசுலா அமெரிக்காவின் கண்களை உறுத்தியே வந்தது. வெனிசுலாவில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்து, அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக தொடர்ந்து கூறி வந்தது அமெரிக்கா.

இந்நிலையில், ‘ஆப்ரேஷன் சதர்ன் ஸ்பியர் எனப்படும் 'தெற்கில் வேட்டை எனும் ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதை, அமெரிக்காவின் கடற்படை செயல்படுத்தியது. கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் கடல் வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான படகுகள், கப்பல்களை குண்டு வீசி அழித்தது.

2025 செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை இந்த பகுதிகளில் அமெரிக்க படைகள், 30 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி போதை பொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டது என கூறி, வெனிசுலாவின் படகு தளத்தை அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. ஆளில்லா விமானம் மூலம் தாக்கி அழித்தது.

இது, சமீபத்தில் வெனிசுலா மண்ணில் அமெரிக்கா நடத்திய முதல் நேரடி தாக்குதல். முன்னதாக போதை பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் வெனிசுலா மீது தீவிர தாக்குதல் நடத்தும் யோசனையும் உள்ளது என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் கடந்த ஜனவரி 1ம் தேதி தொலைகாட்சியில் தோன்றி பேசிய வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, "அமெரிக்காவிற்கு வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மீது விருப்பம். போதை பொருள் என்பதெல்லாம் இல்லை. இந்த நோக்கத்தில் தான் வெனிசுலாவை கைப்பற்ற அமெரிக்கா துடிப்பதாக" தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 03ம் தேதி அமெரிக்க ராணுவம், வெனிசுலா மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தி, வெனிசுலாவின் அதிபர் மதுரோ, அவரது மனைவி புரூக்ளின் ஆகியோரை நாடு புகுந்து கைது செய்தது. தற்போது அவர்கள் அமெரிக்காவின் கொடிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா… உலக நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் - பின்னணி?

அமெரிக்கா தற்போது தனது அடுத்த டார்கெட்டாக கிரீன்லாந்து நாட்டை குறிவைத்துள்ளது. வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பனிப் பிரதேசமான கிரீன்லாந்து ஐரோப்பிய நாடான டென்மார்க் அரசாட்சிக்கு உட்பட்டது.

கனிம வளங்கள் மிகுந்த கிரீன்லாந்து தற்போது அமெரிக்காவின் கண்களை உறுத்தி வருகிறது. இதனால் கிரீன்லாந்தை தன்வசப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது அமெரிக்கா.

இந்நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமெரிக்காவிற்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஐரோப்பிய நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு முறைகளை அறிமுகம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். அமெரிக்காவால் கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த புதிய வரி விதிப்பு நடைமுறையில் இருக்கும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதற்கான காரணம் என்னவென்றால் டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து உள்ளிட்ட நாடுகள் கிரீன்லாந்திற்கு ஆதரவாக நிற்கும் நாடுகளாக உள்ளன. எனவேதான் இந்த நாடுகள் அமெரிக்காவிற்கு அனுப்பும் அனைத்துப் பொருட்களுக்கும் '10% வரி விதிக்கப்படும்' என கூறியுள்ளார்.

கிரீன்லாந்தை கைப்பற்றும் ஒப்பந்தம் காலதாமதமாகும் பட்சத்தில் ஜூன் 1 அன்று இந்த வரிவிதிப்பு 25% ஆக அதிகரிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், "உலகத்தின் அமைதி தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. சீனா கிரீன்லாந்தை விரும்புகிறது, அதைப்பற்றி டென்மார்க்கால் எதுவும் செய்ய முடியாது என கூறியுள்ளார்.

கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா… உலக நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் - பின்னணி?

டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் தங்களுக்கு என்ன நோக்கம் என்றே தெரியாமல் கிரீன்லாந்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றன என்றும், அவை மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடுகின்றன.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக தனது நாடு கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் என்றும், எளிதாக அல்லது கடினமான வழியில் அந்நாட்டை கட்டுப்பாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக" ட்ரம்ப் கூறியுள்ளார்.

அவரது கோரிக்கைகளை கிரீன்லாந்தின் தலைவர்களும், நேட்டோ உறுப்பினரான டென்மார்க்கும் நிராகரித்துள்ளனர். கிரீன்லாந்து தீவு ஒரு பாதியளவு தன்னாட்சி பிரதேசமாகும். வட அமெரிக்காவிற்கும் ஆர்க்டிக்கிற்கும் இடையில் கிரீன்லாந்தின் இருப்பிடம் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஆட்பட்டால் மிகவும் ஆபத்தாக முடியும் என நேட்டோ கவலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், "நாம் கிரீன்லாந்தை கைப்பற்றவில்லை என்றால், ரஷ்யா அல்லது சீனா கிரீன்லாந்தை கைப்பற்றும்" என்று டிரம்ப் எதிர்வாதமாக வைத்து வருகிறார்.

கிரீன்லாந்திற்கு இருக்கும் அச்சுறுத்தலை தொடர்நது பல ஐரோப்பிய நாடுகள் ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிக்காக தங்கள் நாட்டு வீரர்களை அங்கு அனுப்பி வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகள் மீது டிரம்ப் புதிய வரிகளை அறிவித்து அந்த நாடுகளையும் மிரட்டி வருகிறார்.

உலகளவில் அமெரிக்கா மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் விதமாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது, காலனித்துவத்திற்கு வழிவகுத்து, உலகப்போருக்கு இட்டுச்செல்லும் என பல்வேறு உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

banner

Related Stories

Related Stories