மு.க.ஸ்டாலின்

“திமுக ஆட்சியில் அணைகளே கட்டப்படவில்லையா?” - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முதலமைச்சர்.. - விவரம் உள்ளே!

“திமுக ஆட்சியில் அணைகளே கட்டப்படவில்லையா?” - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முதலமைச்சர்.. - விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.1.2026) செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்டத்தின் பழைய மாமல்லபுரம் சாலைக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையில் கோவளம் உபவடிநிலப் பகுதியில் “மாமல்லன்” புதிய குடிநீர் நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையில் திமுக ஆட்சியில் அணைகள் எதுவும் கட்டவில்லை என்று காலகாலமாக பொய் பரப்பி வருபவர்களுக்கு பட்டியலிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் பேசியது வருமாறு :-

1967-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 2011 வரை நம்முடைய தமிழ்நாட்டில், 43 அணைகள் கட்டப்பட்டிருக்கிறது. அதைப் பட்டியலோடு பெயர்களோடு சொல்ல வேண்டும் என்று சொன்னால்,

  1. உப்பாறு

  2. சிற்றாறு-1

  3. சிற்றாறு-2

  4. பெருவாரிப்பள்ளம்

  5. சோலையாறு

  6. பொன்னணியாறு

  7. கருப்பாநதி

  8. இராமநதி

  9. பரப்பலாறு

  10. மேல்நீராறு

  11. பிளவக்கல் கோவிலாறு

  12. பிளவக்கல் பெரியாறு

  13. குடகணாறு

  14. பாலாறு பொருந்தலாறு

  15. குண்டேரிப்பள்ளம்

  16. வரதமாநதி

  17. வட்டமலைகரை ஓடை

  18. மருதாநதி

  19. வரட்டுப்பள்ளம்

  20. கீழ்நீராறு

  21. குண்டாறு

  22. குதிரையாறு

  23. ஆணைக்குட்டம்

  24. இராஜாத்தோப்பு

  25. சோத்துப்பாறை

  26. மோர்தானா நீர்த்தேக்கம்

  27. அடவி நயினார்

  28. பொய்கையாறு

  29. வடக்கு பச்சையாறு

  30. சாஸ்தா கோவில்

  31. கடனா நதி

  32. நம்பியாறு

  33. சண்முகா நதி

  34. மிருகண்டா நதி

  35. கமண்டலநதி

  36. வண்டல் ஓடை

  37. ஆண்டியப்பனூர்

  38. நல்லதங்காள்

  39. நங்கஞ்சியாறு

  40. சிறுமலையாறு

  41. இருக்கன்குடி

  42. குப்பநத்தம்

  43. மாம்பழத்துறை ஆறு - இப்படி, 43 நீர்த்தேக்கங்களை உருவாக்கியவர்தான் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!

“திமுக ஆட்சியில் அணைகளே கட்டப்படவில்லையா?” - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முதலமைச்சர்.. - விவரம் உள்ளே!

நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்து, நீர்வளம் பெருக்க பல நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுத்துக் கொண்டு வருகிறோம்.

கடந்த ஐந்து வருடமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவு எட்டப்பட்டு, குறித்த நேரத்தில் திறந்து வைத்திருக்கிறோம்.

2021-25 ஆகிய ஐந்து ஆண்டுகளில், காவிரி டெல்டா பகுதிகளில், தூர்வாரக்கூடிய பணிகள் 459 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றிருக்கிறது. 24 ஆயிரத்து 833 கிலோமீட்டர் நீளத்திற்கு சிறந்த முறையில், இவை செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், கடைமடை வரை விவசாயிகள் பயனடைந்தார்கள்.

மாநிலம் முழுவதும் புதிதாக 121 தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

63 அணைகட்டுகள் அமைக்கக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதில், மிக மிக முக்கியமானது

தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு கால்வாய் திட்டம். கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ஆம் நாள் துவங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

ஐந்தாண்டுகளில், 9 டி.எம்.சி. நீர் வறட்சிப் பகுதியான திசையன்விளை மற்றும் சாத்தான்குளம் வரை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

ஊரக வளர்ச்சித்துறை மூலமாக, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், 47 ஆயிரத்து 920 ஏரிகள் மற்றும் 1 இலட்சத்து 33 ஆயிரத்து 967 கிலோமீட்டர் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த வரிசையில்தான், சென்னை மாநகரத்தில், பெருகிவரும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, மற்றுமொரு புதிய நீர்த்தேக்கமான நம்முடைய திராவிட மாடல் ஆட்சி இதை அமைத்திருக்கிறது.

342 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இது அமைக்கப்பட இருக்கிறது.

banner

Related Stories

Related Stories