உலகம்

வெடித்த எத்தியோபியா எரிமலை : 12 ஆண்டுகளில் முதல் முறை - இந்தியாவை நோக்கி நகரும் கருமேகங்கள்!

எத்தியோபியாவில் உள்ள ஹேலி குப்பி ஏரிமலை 12 ஆண்டுகளுக்குபின் வெடித்துள்ளது.

வெடித்த எத்தியோபியா எரிமலை : 12 ஆண்டுகளில் முதல் முறை - இந்தியாவை நோக்கி நகரும் கருமேகங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எத்தியோபியா நாட்டில் ஹேலி குப்பி என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை 12 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்துள்ளது. இதனால், சாம்பல் மேகம் 15,000–25,000 அடி முதல் 45,000 அடி வரை உயரத்தில் நகர்கிறது.

மேலும் லாவா குழம்பும் வெளியேறி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிமலையை ஒட்டியுள்ள பகுதி மக்களை அந்நாட்டு மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளன.

இந்த மேகங்கள் அருகே இருக்கும் நாடுகளையும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வட இந்தியாவை நோக்கி மணிக்கு 100-120 கிமீ வேகத்தில் சாம்பல் மேகங்கள் நகர்ந்து வருகிறது. இதனால் விமான சேவை பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும் கருமேகத்தில் சல்பர் டை ஆக்சைடு மற்றும் கண்ணாடி மற்றும் பாறையின் நுண்ணிய துகள்கள் பரவியுள்ளன. இந்த கருமேகம் குஜராத், ராஜஸ்தான், வடமேற்கு மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories