உலகம்

"காசா போர் நிறுத்தத்துக்கு தயார்"- டிரம்புடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு !

அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்த 20 பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ கூறியுள்ளார்

"காசா போர் நிறுத்தத்துக்கு தயார்"- டிரம்புடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது.

மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில்,பல லட்சம் பாலஸ்தீனியர்கள் வெளியேறியுள்ளனர்.

"காசா போர் நிறுத்தத்துக்கு தயார்"- டிரம்புடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு !

மேலும் காசா பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்து,கடந்த சில நாட்களுக்கு முன்னர் காசா நகரின் மீது இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கி அதன் பல்வேறு பகுதிகளை கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.

இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சிகளை எடுத்துவந்த நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முயற்சிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ ஒப்புதல் அளித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்த 20 பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பேசிய டிரம்ப் இந்த பரிந்துரைகளுக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்தால் உடனடியாக போர் உ=முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories