உலகம்

முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க கைது : இலங்கையில் நடப்பது என்ன?

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க கைது : இலங்கையில் நடப்பது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்தார்.

இப்பயணத்தை முடித்து நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, முன்னாள் அதிபர் தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்றிருந்தார்.

இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மூலம் முன்னாள் அதிபர் மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கியிருந்தார்.

இருப்பினும், முன்னாள் அதிபர் சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு நபர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.

அதன்படி, விசாரணை தொடங்கப்பட்டு, முன்னாள் அதிபரின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து சமீபத்தில் அந்தத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.

அதைத் தொடர்ந்து, விக்ரமசிங்கவை நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் விக்ரமசிங் ஆஜரானார்.

சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், முன்னாள் அதிபர் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர், நீண்ட விசாரணைகளின் போது அரசாங்க தரப்பு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலின் கடுமையான எதிர்ப்புக் காரணமாக ரணிலுக்கான பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, 26 ஆம் தேதி வரை சிறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறையில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் அதிபர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories