உலகம்

”நான் இல்லை என்றால் தேர்தலில் ட்ரம்ப் தோற்று இருப்பார்” : எலான் மஸ்க் காட்டம் - மோதலுக்கு காரணம் என்ன?

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும், எலான் மஸ்க்-குக்கும் இடையே இருந்து வந்த மோதல் போக்கு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

”நான் இல்லை என்றால் தேர்தலில் ட்ரம்ப் தோற்று இருப்பார்” : எலான் மஸ்க் காட்டம் - மோதலுக்கு காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிக்காக, பிரச்சாரம் செய்தவர் எலான் மஸ்க். இவர் தேர்தல் வெற்றிக்காக பல விதங்களில் உதவியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால்தான் தேர்தலில் வெற்றி பெற்ற உடன் செயல்திறன் மேம்பாட்டு துறை என்று உருவாக்கப்பட்டு அதற்கு தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். இது இவர்களுக்கு இடையே இருக்கும் உறவை வெளிப்படுத்தியது.

இந்நிலையில், சில நாட்களாகவே அதிபர் ட்ரம்ப்-க்கும் எலான் மஸ்க்-க்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இவருக்காக உருவாக்கப்பட்ட செயல்திறன் மேம்பாட்டு துறை தலைவர் பதவியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் எலான் மஸ்க்.

இந்த விலகளுக்கு காரணம்,புதிய வரி மசோதா. "இந்த மசோதா நாட்டின் செலவை அதிகரிக்குமே தவிர கட்டுப்படுத்தாது, முட்டாள்தனமான மசோதா இது" என எலான் மஸ்க் விமர்சித்தார்.

இதற்கு ட்ரம்ப், ”எலான் மஸ்க் இப்படி கூறியது ஏமாற்றம் அளிக்கிறது. மசோதா குறித்து முழுமையாக அறிந்தவர் அவர். இனி எங்களுக்கான நட்பு எல்லவிதமாக தொடருமான என தெரியவில்லை” என கூறினார்.

பின்னர் எலான் மஸ்க், நான் இல்லை என்றால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் பெற்றி பெற்று இருக்க மாட்டார். தோற்று இருப்பார். அவர் நன்றி மறந்திருக்கக் கூடாது என கட்டமாக விமர்சித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இருவம் மாரிமாரி விமர்சித்து வருகிறார்கள்.

”டொனால்ட் ட்ரம்ப்-பை அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்-ஐ புதிய அதிபராக நியமிக்க வேண்டும்” என எலான் மஸ்க் கூறியுள்ளார்.

மேலும் ”மிகப்பெரிய வெடிகுண்டைத் தூக்கிப் போட வேண்டிய நேரம் வந்துவிட்டது. Epstein filesல் அதிபர் ட்ரம்பும் உள்ளார். அதனால்தான் அதை அவர் வெளியிட மறுக்கிறார். உண்மை ஒருநாள் வெளிவரும்.” என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் எலான் மஸ்க். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு தற்போது உலகம் முழுவதும் கவனம் பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories