உலகம்

ராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழர்களின் நிலங்கள் திரும்பத் தரப்படும் - இலங்கை புதிய அதிபர் உறுதி !

ராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழர்களின் நிலங்கள் திரும்பத் தரப்படும் - இலங்கை புதிய அதிபர் உறுதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இலங்கையின் எட்டாவது அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 38 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அநுர குமார திசநாயக்கே இடதுசாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணி கட்சி தலைமையின தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்டார்.

இலங்கை அதிபர் தேர்தல் முடிவடைந்த நிலையில், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் யாருக்கும் 51 % வாக்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் முதல் இரண்டு இடங்களை பிடித்த அநுர குமார திசநாயக்கே ,சஜித் பிரேமதாசா ஆகிய இருவரில் யார் அதிபர் வேட்பாளர் என்பதை அறிய இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

அதன் முடிவில் 55% வாக்குகளை பெற்று அநுர குமார திசநாயக்கே அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கையின் 9-வது அதிபராக அநுர குமார திசநாயக்கே பதவியேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

ராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழர்களின் நிலங்கள் திரும்பத் தரப்படும் - இலங்கை புதிய அதிபர் உறுதி !

புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தனது ஜனதா விமுக்தி பெரமுன அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்திக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிபர் அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், உள்நாட்டுப் போரின் போது இலங்கை ராணுவம் ஆக்கிரமத்திருக்கும் தமிழர்களின் நிலங்கள் உடனடியாக திரும்பித் தரப்பித் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். அதோடு தமிழர்களின் முழு சுதந்திரத்தை தனது அரசு உறுதி செய்யும் என்றும் தெரிவிதார் .இருப்பினும், தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அதிகாரப் பகிர்வு குறித்து எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories