உலகம்

அமெரிக்க இராணுவ தளம் மீது ட்ரோன் தாக்குதல் : பின்னணியில் ஈரான் ? விவரம் என்ன ?

சிரியாவில் இருந்த அமெரிக்க இராணுவ தளம் மீது திடீரென்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க இராணுவ தளம் மீது ட்ரோன் தாக்குதல் : பின்னணியில் ஈரான் ? விவரம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 6 மாதங்களாக இஸ்ரேலுக்கும் ஹாமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் ஆயுத உதவிகளை செய்து வருவதாக இஸ்ரேல் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதனைத் தொடர்ந்து சிரியா நாட்டில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக கூறி அதற்கு பதிலடி தரப்படும் என்று ஈரான் சார்பில் கூறப்பட்டிருந்தது.அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் 99 சதவீதத்தை வானில் வைத்தே அழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறியது.

ஈரானின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள விமானப்படை தளம் மற்றும் அணுமின் நிலையம் ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர் அச்சத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்க இராணுவ தளம் மீது ட்ரோன் தாக்குதல் : பின்னணியில் ஈரான் ? விவரம் என்ன ?

முன்னதாக இஸ்ரேல் மேல் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு அமெரிக்க கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சிரியாவில் இருந்த அமெரிக்க இராணுவ தளம் மீது திடீரென்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவின் சும்மர் நகரில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் பகுதியில் இருந்து ட்ரோன்கள் மூலம் ஐந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளது. இதில் ராணுவ தளத்துக்கு சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த தாக்குதலை ஈரான் அரசு நடத்தவில்லை என்றும், ஈரான் ஆயுத உதவிகள் அளிக்கும் ஆயுத குழுக்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories