உலகம்

நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்படவுள்ள சொத்துக்கள் ! தேர்தலுக்கு முன் டிரம்ப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு !

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்படவுள்ள சொத்துக்கள் ! தேர்தலுக்கு முன் டிரம்ப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

அதிபர் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் தனது சொத்து மதிப்பை மிகைப்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது அந்த வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்படவுள்ள சொத்துக்கள் ! தேர்தலுக்கு முன் டிரம்ப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு !

அதில், டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதால் அவர் 355 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2900 கோடி ரூபாய்) அபராதம் செலுத்த வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. அதேபோல அவரது நிறுவனத்தின் முக்கிய தலைமைப் பொறுப்பில் மூன்று ஆண்டுகளுக்கு செயல்பட தடையும் விதித்து உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கில் அபாரதத் தொகையை வரும் திங்கள்கிழமைக்கும் செலுத்தவேண்டும் என நீதிமன்றம் அவருக்கு காலக்கெடு விதித்திருந்த நிலையில், அந்த தொகையை திரட்டுவதில் டிரம்ப் சிக்கலை சந்தித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நீதிமன்றம் விதித்த இந்த அபராதத் தொகையை தமது ஆதரவாளர்களிடம் இருந்து பெறப்போவதாக டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், அவரால் போதுமான தொகையை திரட்டமுடியவில்லை என்று கூறப்படுகிறது. ஒருவேளை அவரால் இந்த தொகையை கட்டமுடியாமல் போனால் Trump Tower உட்பட நியூயார்க் நகரில் பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories