உலகம்

7.5 ரிக்டர் அளவில் 13 அடி ஆழத்தில் நிலநடுக்கம்.. ஜப்பானில் தாக்கிய சுனாமி அலை :ஆண்டின் தொடக்கத்தில் ஷாக்!

2024-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஜப்பானில் சுனாமி அலை தாக்கியுள்ள சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7.5 ரிக்டர் அளவில் 13 அடி ஆழத்தில் நிலநடுக்கம்.. ஜப்பானில் தாக்கிய சுனாமி அலை :ஆண்டின் தொடக்கத்தில் ஷாக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஜப்பானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக வடக்கு, மத்திய ஜப்பானில் 5.5 முதல் 7.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்த நிலையில் தொடர்ந்து மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹோன்ஷூ அருகே 13 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும் அபாயம் உள்ளது என்றும், இஷிகாவா, நிகட்டா மற்றும் டொயாமா ஆகிய கடலோரா மாகாண பகுதிகளுக்கு ஜப்பான் ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட கடலோரப் பகுதிகளை விட்டு மக்கள் விரைவாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

7.5 ரிக்டர் அளவில் 13 அடி ஆழத்தில் நிலநடுக்கம்.. ஜப்பானில் தாக்கிய சுனாமி அலை :ஆண்டின் தொடக்கத்தில் ஷாக்!

இந்த நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி அலை தாக்கியது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் அவசரக்கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது. மேலும் ஜப்பானில் உள்ள இந்தியர்கள், ஜப்பான் நாட்டு அரசின் அறிவுரைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பான் நாட்டில் சுனாமி அலை தாக்கியுள்ள நிகழ்வு உலக நாடுகள், மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் ஏற்கனவே 2011-ல் சுனாமி அலை தாக்கியது. அதோடு 2004-ல் இந்தோனேசியா அருகே ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இந்தியாவில் சுனாமி ஏற்பட்டது என்பது கூடுதல் தகவல்.

banner

Related Stories

Related Stories