உலகம்

ரூ.41 கோடி மதிப்புள்ள மாளிகையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய குடும்பம்.. அமெரிக்காவில் அதிர்ச்சி !

ரூ.41 கோடி மதிப்புள்ள மாளிகையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய குடும்பம்.. அமெரிக்காவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியா வம்சாவளி தம்பதியான ராகேஷ் கமல் (வயது 57), டீனா (வயது 54) ஆகியோர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு அரியானா ( வயது18 ) என்ற மகள் இருந்துள்ளார். இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு EduNova என்ற கல்வி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிறுவனத்தை தொடங்க இந்த தம்பதியினர் ஏராளமான அளவு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த கல்வி நிறுவனத்தி ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த கல்வி நிறுவனத்தை இந்த தம்பதியினரால் தொடர்ந்து நடத்த முடியவில்லை.

இதன் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு இந்த நிறுவனம் திவால் ஆனதாக இந்த தம்பதியினர் அறிவித்தனர். இனித்த நிலையில், டோவர் நகரில் தங்கள் வசித்து வந்த மாளிகையில் இந்த தம்பதியினர் மற்றும் அவர்களது மகள் ஆகியோர் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

ரூ.41 கோடி மதிப்புள்ள மாளிகையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய குடும்பம்.. அமெரிக்காவில் அதிர்ச்சி !

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், டோவர் நகரில்19 ஆயிரம் சதுர அடி பரப்பில், 5 மில்லியன் டாலர் மதிப்புடைய (இந்திய மதிப்பில் 41 கோடி ) 11 படுக்கையறைகள் கொண்ட மாளிகையை இந்த தம்பதியினர் கடந்த 2019-ம் ஆண்டு வாங்கி அங்கு வசித்து வந்தனர்.

இந்த சூழலில் இவர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குடும்பத்தை அவர்களது உறவினர்கள் கடந்த 2 நாள்களாக தொடர்பு கொள்ள முயன்ற நிலையில், அதற்கு யாரும் பதிலளிக்காததால் அவர்களது உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன்படி போலிஸார் அந்த மாளிகைக்கு சென்றபோது அங்கு அந்த குடும்ப உறுப்பினர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் இவ்ர்கள் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories