அரசியல்

துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !

கேரளாவில் உள்ள இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக துணை வேந்தரை நியமித்த அப்போதைய ஆளுனர் ஆரிப் கானின் நியமனம் செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் இழுத்தடித்து அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

இப்படி மசோதாக்களுக்கு மட்டுமின்றி பல்வேறு இடைஞ்சல்களை ஆளுநர் மாநில அரசுகளுக்கு கொடுத்து வருகிறார். இதனை எதிர்த்து தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள், அம்மாநில ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !

அதோடு பல்கலைக்கழகங்களுக்கு அரசின் பரிந்துரையை மீறி துணை வேந்தர்களை நியமிப்பது போன்ற செயல்களிலும் பாஜக அரசு நியமித்த ஆளுநரின் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கேரளாவின் முன்னாள் ஆளுநர் ஆரிப் கான் அரசின் பரிந்துரையை மீறி இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக துணை வேந்தரை நியமித்தார்.

இதற்கு மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், கேரளாவில் உள்ள இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக துணை வேந்தரை நியமித்த அப்போதைய ஆளுனர் ஆரிப் கானின் நியமனம் செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அரசு பரிந்துரைத்த நபர்களில் இருந்து ஒருவரையே துணை வேந்தராக ஆளுநர் நியமிக்கவேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories