உலகம்

1.4 மில்லியன் டாலர் வரி ஏய்ப்பு: கடும் குற்றச்சாட்டில் சிக்கிய அமெரிக்க அதிபர் மகன்.. சிக்கலில் ஜோ பைடன்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1.4 மில்லியன் டாலர் வரி ஏய்ப்பு: கடும் குற்றச்சாட்டில் சிக்கிய அமெரிக்க அதிபர் மகன்.. சிக்கலில் ஜோ பைடன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்தில் அமெரிக்கா சறுக்கி வருகிறது. மேலும், உள்நாட்டிலும் வங்கி திவால், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது.

1.4 மில்லியன் டாலர் வரி ஏய்ப்பு: கடும் குற்றச்சாட்டில் சிக்கிய அமெரிக்க அதிபர் மகன்.. சிக்கலில் ஜோ பைடன்!

இந்த நிலையில், அவரின் மகன் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோ பைடனின் மகனான ஹண்டர் பைடன் வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார். இவர் 2016 - 2020 வரையிலான காலகட்டத்தில் 7 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளார் என்றும், ஆனால்,2016 - 2019 வரையிலான ஆண்டுகளில் செலுத்தவேண்டிய குறைந்தபட்ச 1.4 மில்லியன் டாலர் வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

மேலும், சம்பாதித்த பொருளில், போதைப்பொருள், எஸ்கார்ட், தோழிகள், சொகுசு ஹோட்டல்கள், வாடகைப் பொருள்கள், கவர்ச்சியான கார்கள், ஆடைகள் என ஆடம்பரமாகச் செலவழித்திருக்கிறார் என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இது வரும் தேர்தலில் ஜோ பைடனுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories