இந்தியா

பாலியல் புகாரை வாபஸ் வாங்க மறுத்த சிறுமி- ஆசிட் ஊற்றி அதே ஆசிட்டை குடித்த முதியவர்.. டெல்லியில் அதிர்ச்சி

பாலியல் புகாரை வாபஸ் வாங்க மறுத்த சிறுமி மீது ஆசிட் ஊற்றிய முதியவர் அதே ஆசிட்டை குடித்து உயிரிழந்துள்ளார்.

பாலியல் புகாரை வாபஸ் வாங்க மறுத்த சிறுமி- ஆசிட் ஊற்றி அதே ஆசிட்டை குடித்த முதியவர்.. டெல்லியில் அதிர்ச்சி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெல்லியைச் சேர்ந்தவர் பிரேம் சிங் (வயது 54). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னர், இது குறித்து சிறுமி தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரேம் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், பிரேம் சிங் தனது நெருங்கிய உறவினர் திருமணத்துக்காக பரோலில் வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில், பரோலில் வந்த பிரேம் சிங் சிறுமியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சென்றவர் தன மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் வாங்குமாறு சிறுமியின் வீட்டாரிடம் தகராறு செய்துள்ளார். எனினும் சிறுமியின் வீட்டார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பாலியல் புகாரை வாபஸ் வாங்க மறுத்த சிறுமி- ஆசிட் ஊற்றி அதே ஆசிட்டை குடித்த முதியவர்.. டெல்லியில் அதிர்ச்சி

இதனால் ஆத்திரம் அடைந்த பிரேம் சிங், தான் மறைத்துவைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து ஆசிட்டை சிறுமியின் மீது வீசியுள்ளார். இதில் சிறுமி துடித்த நிலையில், மீதம் இருந்த ஆசிட்டை பிரேம் சிங் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதன் பின்னர் சிறுமி மற்றும் பிரேம் சிங் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரேம் சிங் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories