உலகம்

கூகுள் உருவாக்கிய மிரட்டலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் : Gemini சேவையின் சிறப்பம்சம் என்ன ?

கூகுள் நிறுவனம் Gemini என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வெளியிட்டுள்ளது.

கூகுள் உருவாக்கிய மிரட்டலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் : Gemini சேவையின் சிறப்பம்சம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. Chat GPT மென்பொருள் செயற்கை ரோபோ போல செயல்படும் ஒரு அமைப்பாகும். இதனால் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், நம்முடன் உரையாட முடியும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பதில்களையும் Chat GPT-யால் தரமுடியும். அதிலும் கல்வி நிலைய பயன்பாடுகளில் கடிதம் முதல் கட்டுரை வரை அனைத்தையும் இதனால் செய்யமுடியும்.

சுமார் 100 மொழிகளில் Chat GPT மென்பொருள் தற்போது கிடைக்கிறது என்றாலும் ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் இதன் திறன் சிறப்பாக இல்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் Chat GPT மென்பொருளை தனது தேடுதல் பொறியான BING-ல் இணைத்து லாபம் ஈட்ட மைக்ரோசாப்ட் முயற்சித்து அதற்கான செயலில் இறங்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் வந்தபிறகு இது தேடுதல் வலைத்தளமாக உலகளவில் ஆதிக்கம் செல்லும் கூகுள் நிறுவனத்துக்கு பெரும் சவாலாக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டது.

இதன் காரணமாக இதற்கு போட்டி செயலியை உருவாக்க கூகுள் நிறுவனம் முயன்று தற்போது 'Bard' எனப் பெயரிடப்பட்டிருக்கும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இது பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து தற்போது கூகிள் நிறுவனம் Gemini என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வெளியிட்டுள்ளது.

கூகுள் உருவாக்கிய மிரட்டலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் : Gemini சேவையின் சிறப்பம்சம் என்ன ?

எழுத்து (text) வடிவில் மட்டுமல்லாமல், புகைப்படங்கள், காணொளி ஆகியவற்றை புரிந்துகொண்டு நமக்கு தகவலை அளிக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் உருவாகியுள்ளது. இது தவிர கேமராவின் முன் ஒரு காகிதத்தில் ஏதேனும் வரைந்தாலோ அல்லது கை அசைவுகள் மூலம் தகவல்கள் தெரிவித்தாலோ, அதனையும் புரிந்துகொண்டு உரையாடல்கள் மேற்கொள்ளும் வகையில் இந்த Gemini செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாகியுள்ளது.

தற்போது 'கூகுள் பார்ட்' தளத்தில் இந்த Gemini சேவை பயன்பாட்டில் உள்ள நிலையில், ஜெமினி ப்ரோ டிசம்பர் 13 அன்றும், ஜெமினி அல்ட்ரா அடுத்த ஆண்டும் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது என கூகிள் நிறுவனர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories