தற்போதுள்ள காலத்தில் அனைவரும் தங்களுக்கு இருக்கும் கலை திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி கலைகளில் முக்கியமான ஒன்று தான் ஓவியக்கலை. இந்த கலைகளில் பலரும் சிறந்து விளங்கியுள்ளனர். அதில் முக்கியமானவர்கள்தான் Leonardo da Vinci மற்றும் Pablo Picasso. இவர்கள் இருவரது ஓவியங்களும் கலைத்திறமைகளும் இன்றளவும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.
மேலும் ஓவியர்களுக்கு இவர்கள் தான் ஒரு முக்கிய உதாரணமாக காட்டப்படுவர். சாதாரண மக்களுக்கு இவர்களது கலை புரியா விட்டாலும், கலைஞர்களுக்கு இவர்களது வேலை புரியும் என்று பலரும் கருத்துகளும் கூறி வருகின்றனர். தங்கள் சிறந்த படைப்புகள் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானர். தொடர்நது இவர்களது கலை இன்றளவும் பேசப்படுகிறது.
இந்த சூழலில் சுமார் 91 ஆண்டுகளுக்கு பிறகு பிக்காஸோவின் (Picasso) ஓவியம் 139 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.1,150 கோடி) ஏலம் போயுள்ளது. 'Woman with a Watch' என்ற அந்த ஓவியமானது பிக்காஸோவால், கடந்த 1932-ம் ஆண்டு வரையப்பட்டது. இந்த ஓவியமானது, ஸ்பானிஷ் கலைஞரின் காதலர்களில் ஒருவரை சித்தரிக்கிறது - பிரெஞ்சு ஓவியர் மேரி-தெரேஸ் வால்டர் - நீல பின்னணியில் சிம்மாசனம் போன்ற நாற்காலியில் அமர்ந்துள்ளார்.
பிரபல ஓவியரான வால்டர் 1927-ம் ஆண்டு, தனது 17 வயதில், பாரிஸ் நகரத்தில் வைத்து பிக்காசோவை சந்தித்தார். வால்டர் அப்போது ரஷ்ய-உக்ரேனிய பாலே நடனக் கலைஞரான (Ballet Dancer) ஓல்கா கோக்லோவாவை திருமணம் செய்தார். அவர்களது ஒரு உணர்ச்சிமிக்க உறவு தான், பிக்காசோவுக்கு மேலும் உருவப்படங்களை உருவாக்க ஊந்துகோலாக இருந்தது.
இந்த ஓவியம் கலை ஆர்வம் கொண்ட எமிலி ஃபிஷர் லாண்டவ் என்பவர் 400 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்ததையடுத்து, அவரது கலை சேகரிப்பில் ஒன்றான பிக்காஸோவின் 'Woman with a Watch' என்ற ஓவியம் விற்பனைக்கு வந்தது. 91 ஆண்டுகள் பழமையான இந்த ஓவியம் தற்போது 139 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.1,150 கோடி) முகம் தெரியாத நபர் ஒருவர் வாங்கியுள்ளார்.