உலகம்

Halloween கொண்டாட்டம்.. விற்பனைக்கு வந்த உண்மையான மனித மண்டை ஓடு.. களத்தில் இறங்கிய போலிஸ் !

ஹாலோவீன் பண்டிகையில் உண்மையான மனித மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Halloween கொண்டாட்டம்.. விற்பனைக்கு வந்த உண்மையான மனித மண்டை ஓடு.. களத்தில் இறங்கிய போலிஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஹலோவீன் (Halloween) உலகம் முழுக்க பல்வேறு இடங்களில் கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது, மக்கள் விரும்பி கொண்டாடப்படும் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேய் உடைகள் அணிந்து பயமுறுத்தும் வகையில் தோற்றத்தில் இருப்பர்.

இந்த விழாவானது அங்கிருக்கும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவைகளிலும் கொண்டாடப்படும். இந்த பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடும் இந்த பண்டிகைக்காக மக்கள் காத்திருப்பர். இந்த சூழலில் தற்போது ஹாலோவீனுக்காக பொருட்கள் விற்கப்படும் கடை ஒன்றில், உண்மையான மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Halloween கொண்டாட்டம்.. விற்பனைக்கு வந்த உண்மையான மனித மண்டை ஓடு.. களத்தில் இறங்கிய போலிஸ் !

அமெரிக்காவின் புளோரிடாவில் ஹலோவீன் விழாவை முன்னிட்டு மக்களை ஈர்க்கும் வகையில் பல கடைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு பலரும் தங்களுக்கு விருப்பப்பட்ட பயங்கரமான பொருட்களை வாங்கி வருகின்றனர். அந்த வகையில் புளோரிடாவின் வடக்கு கோட்டை மியர்ஸ் என்ற பகுதியில் உள்ள கடைக்கு ஒரு மானுடவியலாளர் (anthropologist) கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சென்றிருக்கிறார்.

அங்கே அவரை கவரும் விதமாக பல பொருட்கள் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எதுவும் அவருக்கு பிடிக்கவில்லை என்பதால் தொடர்ந்து பல பொருட்கள் காண்பிக்கப்பட்டுள்ளது. அப்போது ஒரு மண்டை ஓட்டை எடுத்து காண்பித்துள்ளார் கடைக்காரர். அதனை கண்டதும் பதற்றமடைந்துள்ளார் அந்த மானுடவியலாளர். காரணம் அது உண்மையான மனிதன் ஒருவரது மண்டை ஓடு ஆகும்.

பொதுவாக இதுபோன்ற கடைகளில் போலியான மண்டை ஓடு விற்பனை செய்யப்படும். ஆனால் இங்கே உண்மையானவை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் ஒரு மானுடவியலாளர் என்பதால் இதனை எளிதாக கண்டறிய முடிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

Halloween கொண்டாட்டம்.. விற்பனைக்கு வந்த உண்மையான மனித மண்டை ஓடு.. களத்தில் இறங்கிய போலிஸ் !

அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், உடனடியாக கடைக்காரரை பிடித்து விசாரித்தனர். மேலும் அந்த மண்டை ஓட்டை ஆய்வுக்கும் அனுப்பி வைத்தனர். அப்போது அது உண்மையான மண்டை ஓடு என்பது தெரியவந்தது. அதோடு அந்த மண்டை ஓடு சுமார் 75 ஆண்டுகால பழமையானது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கடைக்காரரை கைது செய்த போலீசார், அந்த மண்டை ஓடு குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதனை அந்த கடைக்காரர், ஒரு பழைய கிடங்கு ஒன்றில் இருந்து எடுத்ததாகவும், தனது வியாபாரத்துக்கு இது உதவியாக இருக்கும் என்று கருதியாகவும் வாக்குமூலம் அளித்தார். எனினும் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories