தமிழ்நாடு

அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!

அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக தமிழர்கள் அயல்நாடுகளுக்கு புலம்பெயர்வது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி ‘அயலகத் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாரியம் மூலம் அயலகத்தில் உள்ள தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினர் பதிவு :

18 முதல் 55 வயது வரை உள்ள அயலகத் தமிழர்கள், அயலகத் தமிழர் நலத்துறையின் வலைதளத்தில் (https://nrtamils.tn.gov.in) ஒரு முறை பதிவு கட்டணமாக ரூ.200/- செலுத்தி கீழ்க்கண்ட இரண்டு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டையினை பெறலாம். இந்த அடையாள அட்டை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும்.

அயலகத் தமிழர் (வெளிநாடு): இந்திய கடவுச்சீட்டு மற்றும் தகுந்த ஆவணங்களுடன் அயல்நாடுகளில் பணிபுரியும் / கல்வி பயிலும் தமிழர்கள் மற்றும் Emigration Clearance பெறப்பட்டு அயல்நாடு செல்ல உள்ள தமிழர்கள் இப்பிரிவில் உறுப்பினராக தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

அயலகத் தமிழர் (வெளிமாநிலம்): இந்தியாவின் பிற மாநிலங்களில் (தமிழ்நாட்டிற்கு வெளியே) ஆறு மாதங்களுக்கு மேல் வசிக்கும் தமிழர்கள் இப்பிரிவில் உறுப்பினராக தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

உறுப்பினர் பதிவை ஊக்குவிக்கும் விதமாக 15.05.2024 முதல் 15.08.2024 வரையிலான மூன்று மாதங்களில் பதிவு செய்யும் நபர்களுக்கு பதிவு கட்டணம் ரூ.200/- செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!

அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் :

அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினர் பதிவு பெற்ற நபர்கள், வாரியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் கீழ்க்கண்ட திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்களிலும் பயன் பெறலாம்.

1. விபத்து காப்பீடு :

அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள நபர் இவ்விபத்து காப்பீட்டில் கீழ்க்கண்ட சந்தாக்களில் தங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

காப்பீட்டு தொகை - ரூ. 5,00,000 ; சந்தா (மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை) - ரூ. 395 + GST

காப்பீட்டு தொகை - ரூ. 10,00,000 ; சந்தா (மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை) - ரூ. 700 + GST

1.2 தீவிர & தொடர் சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான காப்பீடு (Critical Illness) :

தீவிர மற்றும் தொடர் சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான இக்காப்பீடு திட்டத்தில் விருப்பத்தின் பேரில் விபத்து காப்பீட்டு திட்டத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு ஒரு முறை சந்தா செலுத்தி இணையலாம்.

இத்திட்டத்தின் கீழ் வரும் நோய்கள் :

1. Cancer

2. Kidney failure

3. Primary pulmonary arterial Hypertension

4. Multiple Sclerosis

5. Major organ transplant

6. Coronary artery by-pass grafts

7. Aorta graft surgery

8. Heart Valve surgery

9. Stroke

10. Myocardial Infarction (First heart attack)

11. Coma

12. Total Blindness

13. Paralysis

இக்காப்பீடு தீட்டத்தில் கீழ்க்கண்ட சந்தாக்களில் தங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யலாம்.

காப்பீட்டு தொகை - ரூ. 1,00,000/ ; சந்தா (ஆண்டுக்கு ஒரு முறை) - ரூ. 350 + GST

காப்பீட்டு தொகை - ரூ. 1,00,000/ ; சந்தா (ஆண்டுக்கு ஒரு முறை) - ரூ. 350 + GST

காப்பீட்டு தொகை - ரூ. 2,00,000/ ; சந்தா (ஆண்டுக்கு ஒரு முறை) - ரூ. 700 + GST

காப்பீட்டு தொகை - ரூ. 3,00,000/ ; சந்தா (ஆண்டுக்கு ஒரு முறை) - ரூ. 1,050 + GST

காப்பீட்டு தொகை - ரூ. 4,00,000/ ; சந்தா (ஆண்டுக்கு ஒரு முறை) - ரூ. 1,400 + GST

காப்பீட்டு தொகை - ரூ. 5,00,000/ ; சந்தா (ஆண்டுக்கு ஒரு முறை) - ரூ. 1,750 + GST

அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!

2) கல்வி உதவித்தொகை திட்டம் (Scholarship Scheme) :

இத்திட்டத்தின் கீழ் அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று உறுப்பினராக உள்ள தமிழர் இறக்கும் நிலையில் அவர்களின் குடும்பத்திலுள்ள மகன் / மகளுக்கு (அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு) அவர்களின் கல்வி நிலைக்கேற்ப கல்வி உதவித் தொகை வழங்கப்படும்:

பாடப் பிரிவு மற்றும் உதவித் தொகை :

* 10 ஆம் வகுப்பு - ரூ.3000

* 11 மற்றும் 12 ஆம் வகுப்பு (மேல்நிலைக் கல்வி) - ரூ.4000

* தொழிற் பயிற்சி கல்வி - ரூ.4000

* பொறியியல் பட்டயப் படிப்பு - ரூ.5000

* மருத்துவப் பட்டயப் படிப்பு - ரூ.5000

* ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு - ரூ.5000

* உடற்பயிற்சி கல்வி பட்டயப் படிப்பு - ரூ.5000

* பொறியியல் பட்டப்படிப்பு - ரூ.8000

* மருத்துவ பட்டப்படிப்பு - ரூ.8000

* சட்டப் பட்டப்படிப்பு - ரூ.8000

* விவசாய படிப்பு - ரூ.8000

* ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பு - ரூ.8000

* உடற்பயிற்சி கல்வி பட்டப்படிப்பு - ரூ.8000

* பொறியியல் பட்ட மேற்படிப்பு - ரூ.12000

* மருத்துவ பட்ட மேற்படிப்பு - ரூ.12000

* சட்ட பட்ட மேற்படிப்பு - ரூ.12000

* விவசாய பட்ட மேற்படிப்பு - ரூ.12000

* ஆசிரியர் பயிற்சி பட்ட மேற்படிப்பு - ரூ.12000

* உடற்பயிற்சி கல்வி பட்ட மேற்படிப்பு - ரூ.12000

3) திருமண உதவித்தொகை திட்டம் (Marriage Assistance Scheme) :

இத்திட்டத்தின் கீழ் அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று உறுப்பினராக உள்ள தமிழர் இறக்கும் நிலையில் அவர்களின் குடும்பத்திலுள்ள திருமண வயது பூர்த்தியடைந்த மகன் / மகளுக்கு (அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு) திருமண உதவித்தொகையாக ரூ.20,000 வழங்கப்படும்.

கல்வி தகுதி :

பழங்குடியின பிரிவினர் குறைந்த பட்சம் 5ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் ; பிற பிரிவினர் குறைந்த பட்சம் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

4) மேற்காணும் திட்டங்கள் குறித்த கூடுதல் விளக்கங்களை அறிந்து கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் :

அ) கட்டணமில்லா தொலைபேசி உதவி மையம்

அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், வாரியத்தில் உறுப்பினராகுதல் தொடர்பான சந்தேகங்களுக்கும் தீர்வுகாண இவ்வாணையரகத்தின் கட்டணமில்லா தொலைபேசி சேவை மையத்தினை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கட்டணமில்லா உதவி எண் :

18003093793 (இந்தியாவிற்குள்)

8069009901 (அயல்நாடுகளிலிருந்து தொடர்புக்கு)

8069009900 (Missed Call)

ஆ) முன் பயண புத்தாக்கப் பயிற்சி மையம் :

அயல்நாடுகளுக்கு செல்லும் தமிழர்களுக்கு அவர்களுக்கான பாதுகாப்பான, சட்டப்பூர்வமான, முறையான இடப்பெயர்வை உறுதி செய்ய முன் பயண புத்தாக்கப் பயிற்சியானது கீழ்க்கண்ட ஏழு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்டு வருகிறது.

இம்மையங்களை அணுகும் நிலையில் அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களும், வாரியத்தில் உறுப்பினர் பதிவும் மேற்கொள்ளப்படும்.

முன் பயண புத்தாக்கப் பயிற்சி மையங்கள் :

தஞ்சாவூர், இராமநாதபுரம், பெரம்பலூர் - திரு. சந்தானம், Dhan Foundation - +91 86104 64077, +91 97915 25231

கன்னியாகுமரி, சிவகங்கை, விழுப்புரம் - Sr. வளர்மதி, Tamil Nadu Domestic Workers Welfare Trust -

+91 99401 97583, +91 82200 24967

புதுக்கோட்டை - திருமதி. தெய்வானை, Sward Solution Manpower Placement Consultancy - +91 96885 20300

அயலகத் தமிழர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைக்கு பதிவு செய்யும் முறை மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான விரிவான தகவல்களுக்கு இவ்வாணையரக வலைதளத்தினை (https://nrtamils.tn.gov.in) பார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அயல்நாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த மற்றும் புலம்பெயரவுள்ள தமிழர்கள், அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக இணைந்து அரசின் நலத்திட்டங்களை பெற்றிட தமிழ்நாடு அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

banner

Related Stories

Related Stories