உலகம்

அமெரிக்காவில் கொல்லப்பட்ட சீக்கிய மத முதியவர் : அதிகரிக்கும் தாக்குதலால் சிறுபான்மையினர் அச்சம் !

அமெரிக்காவில் 66 வயதான சீக்கியர் ஒருவர் தாக்கப்பட்டு காயம் காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கொல்லப்பட்ட சீக்கிய மத முதியவர் : அதிகரிக்கும் தாக்குதலால் சிறுபான்மையினர் அச்சம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அமெரிக்காவில் சமீபத்திய ஆண்டுகளில் கறுப்பினத்தவர்கள், சிறுபான்மையினர், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் மீதான வெறுப்புணர்வு அதிகரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் சிறுபான்மையினர் தாக்கப்பட்டு வரும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

அங்கு கடந்த வாரம் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகென் என்ற நகரத்தின் மேயராக இருந்த ரவிந்தர் எஸ் பல்லா என்பவருக்கு கொலை மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது அங்கு 66 வயதான சீக்கியர் ஒருவர் தாக்கப்பட்டு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் நகரத்தில் சீக்கிய மதத்தை சேர்த்த 66 வயதான ஜஸ்மர் சிங் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த வியாழக்கிழமை அன்று தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது அகஸ்டின் என்பவரின் கார் எதிரில் வர இரண்டு கார்களும் மோதியுள்ளது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொல்லப்பட்ட சீக்கிய மத முதியவர் : அதிகரிக்கும் தாக்குதலால் சிறுபான்மையினர் அச்சம் !

இதில் ஆத்திரமடைந்த அகஸ்டின் ஜஸ்மர் சிங்கை தாக்கி, அவரின் தலை மற்றும் முகத்தில் மோசமாக தாக்கியுள்ளார். ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜஸ்மர் சிங் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு நியூயார்க் நகர மேயர் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக சீக்கிய மதத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் டர்பன் அணிந்து பேருந்தில் வந்த நிலையில், அதனை எடுக்கச்சொல்லி பேருந்தில் இருந்த ஒருவரால் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories