உலகம்

அரியவகை நோய் : 15 அடி உயர வேலி.. பெண்களால் 55 வருடமாக வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கும் முதியவர் : காரணம்?

அரியவகை ஃபோபியா காரணமாக முதியவர் ஒருவர் 50 வருட காலமாக பெண்களை கண்டாலே பயந்து ஒளிந்து கொள்ளும் செய்தியானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

அரியவகை நோய் : 15 அடி உயர வேலி.. பெண்களால் 55 வருடமாக வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கும் முதியவர் : காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாக மனிதர்களுக்கு எதாவது ஒன்றின் மேல் பயமிருக்கும். அதனை ஃபோபியா (Phobia) என்று அழைப்பர். இந்த ஃபோபியாவானது எல்லாருக்கும் காணப்படும் ஒன்றாக இருக்கிறது. சிலருக்கு நாய், பூனை போன்ற விலங்குகளில் இருக்கும், சிலருக்கு சத்தம், சிலருக்கு பேய், சிலருக்கு உயரம் உள்ளிட்ட அநேக விஷயங்களுக்கு பயம் இருப்பது வழக்கம்.

அந்த வகையில் இங்கு ஒரு முதியவருக்கு பெண்களை கண்டாலே பயம் என்ற ஒரு அரியவகை ஃபோபியா உள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டா (Rwanda) என்ற பகுதியில் வசித்து வருபவர் கேலிடிக்சே ஜாம்விடா (Callitxe Nzamwita) என்ற நபர் வசித்து வருகிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே பெண்களை கண்டாலே பயம் இருந்துள்ளது.

அரியவகை நோய் : 15 அடி உயர வேலி.. பெண்களால் 55 வருடமாக வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கும் முதியவர் : காரணம்?

ஆரம்பத்தில் இந்த பயத்தை பார்த்து அவர் பயந்து ஓடியுள்ளார். அதன் காரணமாகவே, இவர் பெண்கள் தூரத்தில் வருவதை கண்டால் கூட தனது வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொண்டுள்ளார். சுமார் 16 வயதில் இருந்து இவரது பயம் நாளுக்கு நாள் அதிகரித்தே இருந்துள்ளது. அதனை எதிர்கொள்ளவும் இவர் தயாராகவில்லை என்று தெரிகிறது. இதனாலே இவர் வீட்டினுள்ளே அடைபட்டு இருந்துள்ளார்.

சுமார் 15 அடி உயரத்தில் இவரது வீட்டுக்கு முன் வேலி அமைத்துக்கொண்டுள்ளார். காரணம் இவரது வீட்டுக்கு பெண்கள் யாரும் தெரியாமல் கூட வந்துவிடக்கூடாது என்பதால்; மேலும் பெண்கள் தன்னை நெருங்கக்கூடாது என்பதால். பெண்கள் இருப்பார்கள் என்ற காரணத்தினால் மட்டுமே இவர் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார். இதனால் இவருக்கு சாப்பாடு உள்ளிட்டவைகளை அக்கம்பக்கத்தினர் கொண்டு வந்து இவரது வீட்டுக்குள் வீசி எரிந்து செல்கின்றனர்.

அரியவகை நோய் : 15 அடி உயர வேலி.. பெண்களால் 55 வருடமாக வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கும் முதியவர் : காரணம்?

இவருக்கு உதவ வேண்டும் என்று அக்கம்பக்கத்தில் உள்ள பெண்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், இவர் ஒத்துழைக்கவில்லை என்பதால், இவரது போக்கிலேயே விட்டுவிட்டார்கள். மேலும் இவருக்கு தேவையான தானியங்கள், உணவு பொருட்களை மட்டும் அவரது வீட்டுக்குள் செல்லாமல், வாசலிலே தூக்கி எறிந்து விட்டு செலகின்றனர்.

இந்த அரியவகை ஃபோபியா உள்ள கேலிடிக்சே ஜாம்விடாவிற்கு தற்போது 71 வயதாகிறது. இந்த பயத்தின் காரணமாகவே இவர் திருமணமும் செய்துகொள்ளவில்லை. எனினும் இவரது பயம் இப்போதும் அப்படி தான் இருக்கிறது. சுமார் 55 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பயத்தின் காரணமாக அவர் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார். தற்போது இவர் தொடர்பான செய்தி பேசுபொருளாக மாறியுள்ளது.

அரியவகை நோய் : 15 அடி உயர வேலி.. பெண்களால் 55 வருடமாக வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கும் முதியவர் : காரணம்?

கேலிடிக்சே ஜாம்விடாவிற்கு இருக்கும் ஃபோபியாவை கைனோஃபோபியா (Gynophobia) என்று அழைப்பர். இந்த ஃபோபியா இருப்பவர்களுக்கு பெண்களை கண்டால் ஒரு எரிச்சல், பயம் உள்ளிட்ட உணர்வுகள் ஏற்படும். இந்த ஃபோபியா இருப்பவர்களுக்கு பெண்களை பற்றிய ஆழ்ந்த சிந்தனைகள் ஏற்பட்டு அதன் காரணமாகவே பயம் ஏற்படுகிறது.

இந்த பயத்தினால் அவர்களுக்கு அதிக வியர்வை, இதயத் துடிப்பு அதிகரிப்பு, நெஞ்சடைப்பு உள்ளிட்டவைகள் ஏற்படும். இந்த பிரச்னையால் சுமார் 7% முதல் 10% வரை பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது. எனினும் இந்த பிரச்னை தொடர்பாக பாலின ரீதியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.

banner

Related Stories

Related Stories