விளையாட்டு

முதல் வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா: இலங்கை ஹாட்-ட்ரிக் தோல்வி.. போட்டி நடுவே விழுந்த விளம்பர பலகை !

உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை வீழ்த்தி தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

முதல் வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா: இலங்கை ஹாட்-ட்ரிக் தோல்வி.. போட்டி நடுவே விழுந்த விளம்பர பலகை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐசிசி உலகக்கோப்பை தொடர்கள் முதல் முதலாக கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒருமுறை உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி ஒரு வெற்றி கூட பெறாத இலங்கை அணியை சந்தித்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் பதும் ஷனகா மற்றும் குசால் பெரேரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அபாரமாக ஆடிய இந்த ஜோடி 125 ரன்கள் எடுத்திருந்தபோது பிரிந்தது. அதன்பின்னர் அடுத்தடுத்து இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 209 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஆடம் ஷாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

முதல் வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா: இலங்கை ஹாட்-ட்ரிக் தோல்வி.. போட்டி நடுவே விழுந்த விளம்பர பலகை !

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், மார்ஷ், இங்கிலீஸ் ஆகியோரின் அரைசதத்தால் 35.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றிபெற்து தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. அதே நேரம் இலங்கை அணி தொடர்ந்து மூன்றாவது தோல்வியை சந்தித்துள்ளது.

இந்தப் போட்டியின்போது மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் போட்டி பகுதிநேரம் நிறுத்திவைக்கப்பட்டது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மைதானத்தில் மேற்கூரையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டு பெயர்ந்து விழுந்தது. இந்த போட்டியில் குறைவான கூட்டம் இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories