உலகம்

வகுப்பறையில் ஹிஜாப் சரியாக அணியாத பள்ளி மாணவிகள்.. ஆத்திரத்தில் மொட்டையடித்துவிட்ட கொடூர ஆசிரியர் !

வகுப்பறையில் ஹிஜாப் சரியாக அணியாததால் ஆத்திரப்பட்ட ஆசிரியர் பள்ளி மாணவிகளுக்கு மொட்டையடித்துவிட்ட சம்பவம் இந்தோனேசியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வகுப்பறையில் ஹிஜாப் சரியாக அணியாத பள்ளி மாணவிகள்.. ஆத்திரத்தில் மொட்டையடித்துவிட்ட கொடூர ஆசிரியர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலக முழுக்க பல இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் ஹிஜாப் என்று சொல்லக்கூடிய தலையில் முக்காடு போட்டுக்கொள்ளும் பழக்கம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு சில நாடுகள் தளர்வுகள் விதித்துள்ளது. அந்த வகையில் இந்தோனேசியாவிலும் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என இருந்தது.

ஆனால் இதற்கு பல்வேறு அமைப்புகளும், மக்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கடந்த 2021-ம் ஆண்டு இதற்கு அந்நாட்டு அரசு விதிவிலக்கு அளித்தது. மேலும் பெண்கள் Aceh என்று சொல்லப்படும் இஸ்லாமிய கோயிலை தவிர்த்து வெளியில் ஹிஜாப் அணிவது அவரவர் விருப்பம் என்று அதிரடியாக அறிவித்தது.

வகுப்பறையில் ஹிஜாப் சரியாக அணியாத பள்ளி மாணவிகள்.. ஆத்திரத்தில் மொட்டையடித்துவிட்ட கொடூர ஆசிரியர் !

தற்போது வரை இந்த சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், அங்கிருக்கும் பெண்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப சிலர் ஹிஜாப் அணிந்தும், சிலர் ஹிஜாப் அணியாமலும் இருக்கின்றனர். மேலும் அங்கிருக்கும் பள்ளிகளில் கூட இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. இந்த சூழலில் ஹிஜாப் சரியாக மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் மொட்டையடித்துவிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் முக்கிய நகரத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து சென்றுள்ளனர். இஸ்லாமியர்கள் அல்லாத மாணவிகளும் பயிலும் அப்பள்ளியில், குறிப்பிட்ட வகுப்பு ஒன்றில் 14 இஸ்லாமிய மாணவிகள் படித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அந்த மாணவிகள் வகுப்பறையில் ஒழுங்காக ஹிஜாப் அணியவில்லை என்ற கோபத்தில் ஆசிரியர் ஒருவர் திட்டியுள்ளார்.

வகுப்பறையில் ஹிஜாப் சரியாக அணியாத பள்ளி மாணவிகள்.. ஆத்திரத்தில் மொட்டையடித்துவிட்ட கொடூர ஆசிரியர் !

மேலும் அவர்கள் மீது கொண்ட கோபத்தில் அவர்களது தலையின் ஒரு பகுதியில் உள்ள முடிகளை மொத்தமாக அகற்றி பாதி மொட்டையடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் இஇதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், குறிப்பிட்ட ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பல அமைப்புகள் கோரிக்கை விடுத்து கண்டனங்களையும் தெரிவித்தது. இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹார்டோ தெரிவித்துள்ளார்.

வகுப்பறையில் ஹிஜாப் சரியாக அணியாத பள்ளி மாணவிகள்.. ஆத்திரத்தில் மொட்டையடித்துவிட்ட கொடூர ஆசிரியர் !

மேலும் பேசிய ஹார்டோ, "மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் நேர்த்தியான தோற்றத்திற்காக அவர்கள் தலைக்கவசத்தின் கீழ் உள் தொப்பிகளை (inner caps) அணிய வேண்டும். இருப்பினும் அந்த மாணவிகள் அதனை கடைபிடிக்காமல், அவர்களது முடிகள் தெரியும் படி இருந்துள்ளனர்." என்றார். இந்த சம்பவத்தால் தற்போது அந்நாட்டில் பெரும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இஸ்லாமியர்கள் உட்பட 6 முக்கிய மதத்தினர் அதிகமாக வசிக்கின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு மேற்கு சுமத்ரா என்ற பகுதியில் ஒரு கிறிஸ்தவ மாணவி ஹிஜாப் அணிய வற்புறுத்தப்பட்டதால் இதற்கு தளர்வு கோரி போராட்டம் வெடித்தது. அதன் எதிரொலியாக அப்போதே, இதற்கு தளர்வு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories