உலகம்

காதலி சுட்டுக் கொலை.. கூலாக ஷாப்பிங் சென்று சட்டை வாங்கிய காதலன்: காட்டிக் கொடுத்த CCTV!

அமெரிக்காவில் காதலியை சுட்டுக்கொலை செய்த இந்திய வம்சாவளி வாலிபரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலி சுட்டுக் கொலை.. கூலாக ஷாப்பிங் சென்று சட்டை வாங்கிய காதலன்: காட்டிக் கொடுத்த CCTV!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ரோஸ்வில்லே என்ற பகுதி உள்ளது. இங்கு உள்ள வணிக வளாகத்திற்குக் காதல் ஜோடி ஒன்று வந்துள்ளனர். வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு வந்த போது இவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த காதலன் சிம்ரன்ஜித் சிங் துப்பாக்கியை எடுத்து காதலியை சுட்டுக்கொலை செய்துள்ளார். பிறகு துப்பாக்கியை அங்கேயே வைத்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

காதலி சுட்டுக் கொலை.. கூலாக ஷாப்பிங் சென்று சட்டை வாங்கிய காதலன்: காட்டிக் கொடுத்த CCTV!

இந்த சம்பவம் குறித்து அறிந்து வந்த போலிஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சிம்ரன்ஜித் சிங் காதலியை சுட்டுக்கொலை செய்த காட்சிப் பதிவாகி இருந்தது. பின்னர் வணிக வளாகத்தின் அனைத்து கதவுகளை அடைத்து குற்றவாளியைத் தேடினர்.

அப்போது சிம்ரன்ஜித் சிங் கடையொன்றில் சட்டை வாங்கிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்து போலிஸார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் காதலியை ஏன் கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories