இந்தியா

கேரளா : வேலை முடிந்து வீடு திரும்பிய தொழிலாளர்கள்.. பள்ளத்தில் சிக்கி ஜீப் கவிழ்ந்ததில் 9 பெண்கள் பலி !

கேரள மாநிலம் தாலப்புழா பகுதியில் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஜீப் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 9 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

கேரளா : வேலை முடிந்து வீடு திரும்பிய தொழிலாளர்கள்.. பள்ளத்தில் சிக்கி ஜீப் கவிழ்ந்ததில் 9 பெண்கள் பலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் அமைந்துள்ளது தாலப்புழா என்ற இடம். இங்கு அமைந்திருக்கும் தேயிலை தோட்டத்தில் அதன் சுற்றியிருக்கும் பகுதியில் உள்ள பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். கூலி தொழிலாளியான இவர்கள் தினமும் அங்கு ஜீப்பில் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு அவர்கள் செல்லும் வழியில் கல், மேடு பள்ளம் என இருக்கும்.

அந்த வகையில் சம்பவத்தன்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் தங்கள் பணி முடிந்த பிறகு ஜீப்பில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அந்த ஜீப் கன்னூத்மலை என்ற மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழந்து ஜீப்பை பள்ளத்தில் கவிழ்த்தார்.

கேரளா : வேலை முடிந்து வீடு திரும்பிய தொழிலாளர்கள்.. பள்ளத்தில் சிக்கி ஜீப் கவிழ்ந்ததில் 9 பெண்கள் பலி !

அவ்வாறு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஜீப்பில் பயணித்த 9 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானர். மேலும் ஓட்டுநர் உட்பட 3 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். விபத்து குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் உடந்தையாக தீயணைப்புத்துறை, காவல்துறை, ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா : வேலை முடிந்து வீடு திரும்பிய தொழிலாளர்கள்.. பள்ளத்தில் சிக்கி ஜீப் கவிழ்ந்ததில் 9 பெண்கள் பலி !

இந்த சம்பவத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கேரள முதலமைச்சரும் இரங்கல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வயநாடு தொகுதி எம்.பியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, “வயநாட்டில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உயிரைப் பறித்த ஜீப் விபத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள். மாவட்ட அதிகாரிகளிடம் பேசி, விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். என் எண்ணங்கள் துயரப்படும் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories