மு.க.ஸ்டாலின்

மதுரை இரயில் தீ விபத்து : உயிரிழந்த வட மாநில குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு !

மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை இரயில் தீ விபத்து :  உயிரிழந்த வட மாநில குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மீக சுற்றுலாவுக்கு பயணிகள் சுற்றுலா இரயிலில் பயணித்து வந்தனர். ஆகஸ்ட் 17-ம் தேதி கிளம்பிய பயணிகள் தென் மாநிலங்களில் சாமி தரிசனம் செய்வதற்காக சுமார் 60-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இந்த சூழலில் ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா ரயில், மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

காலை அனைவருக்கு டீ போட வேண்டும் என்று இரயிலில் இருக்கும் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தியபோது, அது வெடித்து பேட்டி ஒன்றில் தீ பற்றியுள்ளது. சுமார் 5.20 மணியளவில் பற்றிக்கொண்ட அந்த தீ தொடர்ந்து அடுத்தடுத்த பெட்டிகளில் பரவ, தீ மளமளவென பற்றத்தொடங்கியுள்ளது. இவ்வாறு அனைத்து பெட்டிகளில் தீ பரவவே அதில் சிக்கி பயணிகள் பெரும் அவதிக்குள்ளானர்.

மதுரை இரயில் தீ விபத்து :  உயிரிழந்த வட மாநில குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு !

தொடர்ந்து இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கவே, அவர்கள் விரைந்து வந்து காலை 7 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து மீட்ப்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 9-க்கும் மேற்பட்ட பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர் பி.மூர்த்தி நேரில் ஆய்வு செய்து வருகிறார். தீ விபத்துக்கான காரணம் சிலிண்டர் வெடிப்பு என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி பயணிகள் தடையை மீறி அவர்கள் கொண்டு வந்த சிலிண்டரை இரயிலுக்குள் பயன்படுத்தியுள்ளனர்.

மதுரை இரயில் தீ விபத்து :  உயிரிழந்த வட மாநில குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு !

மேலும் வட மாநிலங்களை போல் கொள்ளையர்கள் ஏறிவிடுவார்கள் என பெட்டியை பூட்டி வைத்திருந்துள்ளனர். இதனால் தீப்பற்றியபோது அவர்களால் வெளியேற முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இரயில் பெட்டிக்குள் ஆய்வு மேற்கொண்டபோது, விறகு கட்டைகள், எண்ணெய் டின் உள்ளிட்ட பொருட்களும் இருந்தது தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதோடு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியளித்து தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. தொடர்ந்து உயிரிழந்தோரின் வட மாநில குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

மதுரை இரயில் தீ விபத்து :  உயிரிழந்த வட மாநில குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு !

இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில், "உத்திரப் பிரதேச மாநிலம் சித்தூரிலிருந்து இராமேஸ்வரத்திற்கு வந்த ஆன்மீக சிறப்பு சுற்றுலா இரயிலில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு மதுரை இரயில் நிலையத்தில் இன்று (26-8-2023) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதில் பயணித்த பயணிகள் சமையல் செய்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

மதுரை மாவட்ட ஆட்சியரை உடனடியாக விபத்து நடந்த இடத்திற்குச் சென்று உரிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்குக் கொண்டுசெல்ல தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

எனது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். மேலும், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தியை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தேவையான உதவிகளை செய்திடுமாறும் கேட்டுக்கொண்டேன்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories