உலகம்

37,000 அடி உயரம்.. 271 பயணிகள்.. பறந்து கொண்டிருந்த விமானத்தில் சுருண்டு விழுந்த Pilot.. நடந்தது என்ன?

37,000 அடி உயரத்தில் விமானம் ஒன்று நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது Pilot மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

37,000 அடி உயரம்.. 271 பயணிகள்.. பறந்து கொண்டிருந்த விமானத்தில் சுருண்டு விழுந்த Pilot.. நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அமெரிக்காவின் மியாமியில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் சிலி நாட்டிற்கு LATAM Airlines-ன் LA505 என்ற விமானம் புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 271 பயணிகள் பயணித்தனர். அப்போது விமானம் கிளம்பி சுமார் 3 மணி நேரத்தில் திடீரென அங்கிருந்த விமானி இவான் ஆண்டூர் (Captain Ivan Andaur) என்ற 56 வயது விமானி கழிப்பறை சென்றுள்ளார்.

37,000 அடி உயரம்.. 271 பயணிகள்.. பறந்து கொண்டிருந்த விமானத்தில் சுருண்டு விழுந்த Pilot.. நடந்தது என்ன?

சுமார் 37,000 அடி உயரத்தில் பனாமா நகரத்துக்கு அருகே விமானம் சென்று கொண்டிருந்த அந்த சமயத்தில் அவர் திடீரென சுருண்டு விழுந்தார். இதனை கண்டதும் பயந்துபோன பயணிகள், ஊழியர்கள் என அனைவரும் அவருக்கு முதலுதவி செய்தனர். இருப்பினும் அவர் எழுந்திருக்கவில்லை. இதை தொடர்ந்து இந்த தகவல் இணை விமானிக்கு தெரிவிக்கவே, அவர் உடனே பனாமாவில் அமைந்துள்ள Tocumen International விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார்.

37,000 அடி உயரம்.. 271 பயணிகள்.. பறந்து கொண்டிருந்த விமானத்தில் சுருண்டு விழுந்த Pilot.. நடந்தது என்ன?

இதையடுத்து விமானி ஆண்டூரை அங்கிருக்கும் மருத்துவ குழு பரிசோதனை செய்தனர். அப்போது அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பத்திரமாக அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நடு வானில் பறந்துகொண்டிருக்கும்போது விமானி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அங்கிருக்கும் பயணிகள் பெரும் அச்சத்தில் இருந்தனர். தொடர்ந்து இணை விமானி பத்திரமாக விமானத்தை தரையிறக்கிய பிறகே அவர்கள் பெருமூச்சு விட்டனர்.

37,000 அடி உயரம்.. 271 பயணிகள்.. பறந்து கொண்டிருந்த விமானத்தில் சுருண்டு விழுந்த Pilot.. நடந்தது என்ன?

உயிரிழந்த இவான் ஆண்டூர் சுமார் 25 ஆண்டுகால அனுபவம் மிக்க மூத்த விமானி ஆவார். இவரது செயல்பாடுகள் அங்கே விமர்சையாக பாராட்டப்பட்டு வருகிறார். ஆண்டூர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், LATAM Airlines நிர்வாக அவரது மறைவுக்கு குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories