உலகம்

"எங்களை குறை சொல்லாதீர்கள், விடையை உங்கள் நாட்டில் தேடுங்கள்" -பாகிஸ்தானுக்கு தாலிபான் அரசு பதிலடி !

பயங்கரவாதத்துக்கு எங்கள் மீது குற்றம் சாட்டாமல் விடையை பாகிஸ்தான் தங்கள் நாட்டிற்குள்ளேயேதான் தேட வேண்டும் என தாலிபான் அரசு பதிலளித்துள்ளது.

"எங்களை குறை சொல்லாதீர்கள், விடையை உங்கள் நாட்டில் தேடுங்கள்" -பாகிஸ்தானுக்கு தாலிபான் அரசு பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த அரசை வீழ்த்தி தற்போது அங்கு தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு உண்டான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.

அதோடு அங்கு தாலிபனுக்கு எதிரான அமைப்புகள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லை பிரச்னைகள், பயங்கரவாதம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வர உதவினாலும் தற்போது எதிர்தரப்புக்கு பாகிஸ்தான் உதவுவதாக தாலிபான் தலைவர்கள் கருதி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு பின்னர் பாகிஸ்தான் இருப்பதாக தாலிபான் தலைவர்கள் கூறி வருகின்றனர். அதோடு தலிபான் அமைப்பின் ஒரு பிரிவான தெஹ்ரிக்-யே-தலிபான் பாகிஸ்தான் எனும் தீவிரவாத குழு பாகிஸ்தானுக்கெதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

"எங்களை குறை சொல்லாதீர்கள், விடையை உங்கள் நாட்டில் தேடுங்கள்" -பாகிஸ்தானுக்கு தாலிபான் அரசு பதிலடி !

இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், பயங்கரவாதத்துக்கு எங்கள் மீது குற்றம் சாட்டாமல் விடையை பாகிஸ்தான் தங்கள் நாட்டிற்குள்ளேயேதான் தேட வேண்டும் என தாலிபான் அரசு பதிலளித்துள்ளது.

தாலிபான் அரசாங்கம் எல்லை தாண்டும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அவர்கள் அவ்வாறுசெய்யவில்லை. இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்க்கும்" என பாகிஸ்தான் அரசு கூறியிருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள தாலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் "எங்கள் மண்ணை ஒரு போதும் நாங்கள் பயங்கரவாதத்திற்காக எதிராக பயன்படுத்த அனுமதிப்பதில்லை. பட்ஜெட்டில் பெரும் பகுதியை பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த செலவு செய்தும் ஏன் பாகிஸ்தானால் அதில் வெற்றி பெற முடியவில்லை? எங்கள் மீது குற்றம் சாட்டாமல் விடையை பாகிஸ்தான் தங்கள் நாட்டிற்குள்ளேயேதான் தேட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories