தமிழ்நாடு

“ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டாரா?” : சினிமாவை பார்த்து கதைவிட்ட நிர்மலா சீதாராமன் - நடந்தது என்ன?

சட்டமன்றத்தில் 1989 மார்ச் 25ம் நாள் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டதாக ஒன்றிய நிதி அமைச்சர் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை அவையில் பேசியுள்ளார்.

“ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டாரா?” : சினிமாவை பார்த்து கதைவிட்ட நிர்மலா சீதாராமன் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடையவுள்ளது. முதல் சில நிமிடங்கள் மட்டுமே வந்துச்சென்ற பிரதமர் மோடி பின்னர் தலையை காட்டவே இல்லை. நாடாளுமன்றத்திற்கு ஆப்சண்ட் ஆனார் மோடி.

இந்நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மோடிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். பல போராட்டங்களுக்கு பிறகு மூன்றாவது நாளாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதம் இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னதாக 2வது நாளாக நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய மக்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி எம்.பி., “புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்துவிட்டு, அது சோழர் பரம்பரையில் இருந்து வந்ததாக சொன்னீர்கள்; ஆனால் கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா?

“ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டாரா?” : சினிமாவை பார்த்து கதைவிட்ட நிர்மலா சீதாராமன் - நடந்தது என்ன?

தமிழ்நாட்டின் வரலாறு பிரதமர் மோடிக்கு தெரியுமா?; எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டு, சிலப்பதிகாரத்தை படியுங்கள். அதில் உங்களுக்கான பாடம் நிறைய இருக்கிறது” என சாடினார்.

இந்நிலையில், இன்று ஒன்றிய நிதி அமைச்சர் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை அவையில் பேசியுள்ளார். 1989 மார்ச் 25ம் நாள் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டதாக அவருக்கு தெரிந்த நபர்கள் சொன்ன கட்டுக்கதையும், ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் எடுக்கப்பட்ட கற்பனை கதைகளை நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார்கள்.

ஒரு நிதியமைச்சர் பேசும் போது குறைந்தபட்சம் உண்மையாவது இருக்கவேண்டும் என்ற அக்கறை கூட இல்லாமல் பேசியிருக்கிறார். அதுவும் இவர் சொல்லும் நிகழ்வு தமிழ்நாடு சட்டசபையில் நடந்தது என்கிறார். சட்டசபையில் அப்படி நடந்ததாக அவைக் குறிப்புகளில் இருக்கிறதா?

அப்படி ஏதாவது அன்றைய தினம் சபை நிகழ்வுகளை எழுதிய நிருபர்கள் அந்தக் காலக்கட்டத்தில் எழுதி இருக்கிறார்களா? ஜெயலலிதா ஏதாவது வழக்குப் போட்டுள்ளார்களா? என்ன வரலாற்று ஆதாரத்தை வைத்து ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டதாக நிர்மலா சீதாராமன் சொல்கிறார்?

நாடாளுமன்றத்தில் நடக்காத ஒரு சம்பவம் குறித்து இப்படி நடந்ததாக பேசிவிட்டுப் போய்விட முடியுமா? உரிமை மீறல் கொண்டு வர மாட்டீர்களா? அதே உரிமை முறை தமிழ்நாட்டு சட்டசபைக்கு இல்லையா?

“ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டாரா?” : சினிமாவை பார்த்து கதைவிட்ட நிர்மலா சீதாராமன் - நடந்தது என்ன?

அன்று நடந்தது என்ன? (2021 - ஏப்ரல், 21 : முரசொலி தலையங்கத்திலிருந்து..)

14 ஆண்டுகள் கழித்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருகிறது. அவையின் முதல் நிதி நிலை அறிக்கையை முதல்வரும் நிதியமைச்சருமான மாண்புமிகு கலைஞர் அவர்கள் வாசிக்கப் போகிறார்கள். அவரை அவமானப்படுத்தும் வகையில் ஆத்திரத்தின் உச்சத்துக்குப் போய் வார்த்தைகளை உச்சரித்த ஜெயலலிதா தன்னுடைய ஆட்களை வைத்து முதல்வர் கையில் இருந்த நிதிநிலை அறிக்கையைப் பறிக்க வைத்தார்; கிழிக்க வைத்தார்.

முதல்வர் முகத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் குத்தினார். அதனால் அவரது கண்ணாடி உடைந்தது. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலையில் ஒரு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஒலி பெருக்கியால் அடித்தார். அதில் அவர் தலையில் இருந்து ரத்தம் ஒழுகியது.

மிகப்பெரிய மோதலை நடத்துவதன் மூலமாக நிதிநிலை அறிக்கையை அது அறிவிக்கப்பட்ட நேரத்தில் படிக்கவிடாமல் தடுப்பதும் - அதையே காரணமாகக் காட்டி கலவரம் ஏற்படுத்துவதும் - அன்று மாலையே ஆட்சியைக் கலைப்பதும் தான் - ஜெயலலிதாவின் திட்டங்கள். இந்த சதித்திட்டம் தான் 1989 மார்ச் 25 சபையில் அரங்கேறியது.

அவைக்குள் அனைத்து பத்திரிகை நிருபர்களும் இருந்தார்கள். யாராவது மறுநாள் வெளியான நாளிதழில் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டார் என்று எழுதி இருக்கிறார்களா? ஜெயலலிதா அவராகச் சொன்னவை அனைத்தும் பொய்கள். அவரது கற்பனைகள். அந்தக் கற்பனைகள் எப்படி வரலாறு ஆகும்?

“ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டாரா?” : சினிமாவை பார்த்து கதைவிட்ட நிர்மலா சீதாராமன் - நடந்தது என்ன?

அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை அவருடன் இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர் 1996ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தனது வாக்குமூலமாகவே சொல்லி இருக்கிறார். அது இதுதான் : “இப்போது நான் சொல்வது; என்னுடைய தாய் மீது ஆணையாக நான் தெய்வமாக வணங்குகிற எம்.ஜி.ஆர். அவர்கள் மீது சத்தியமாக சொல்வதாகும்.

ஜெயலலிதா அவர்கள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அவரது வீட்டில் உட்கார வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து, ‘நான் பிரதான எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் பட்ஜெட் படிக்கும் போது நான் பிடித்து இழுத்தால் நன்றாக இருக்காது. எனவே என் பக்கத்திலே இருக்கிற நீங்கள் முதலமைச்சர் கருணாநிதியின் கையிலே இருக்கிற பட்ஜெட் காப்பியை பிடித்திழுத்து அடிக்க வேண்டும்' என்று சொன்னார். நான் உடனே மிகுந்த வேதனையோடு சொன்னேன்.

“தெரிந்தோ தெரியாமலோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களை பத்தாண்டு காலம் கௌரவமிக்க பதவிகளில் வைத்துவிட்டுப்போயிருக்கிறார். தயவு செய்து அடியாட்களாக எங்களை மாற்றாதீர்கள். அதற்கு என்னுடைய மனச்சாட்சி இடம் தரவில்லை. இரண்டாவது இதுபோன்ற சம்பவம் வேண்டாம்' என்று நான் வாதாடினேன்.

நான் முடியாது என்று சொன்ன உடனே சட்டமன்ற உறுப்பினர்களைப்பார்த்து , ‘சரி. அவர் மாட்டேன் என்று சொல்லுகிறார். உங்களில் யாருக்கு வசதிபடுகிறதோ அவர்கள் போய் பட்ஜெட் படிப்பதைப் பிடுங்கி கிழியுங்கள்' என்று சொல்லிவிட்டு மேலே போய்விட்டார்.

“ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டாரா?” : சினிமாவை பார்த்து கதைவிட்ட நிர்மலா சீதாராமன் - நடந்தது என்ன?

டைனிங் ஹாலுக்கு உள்ளே டாக்டர் ஹண்டே, ராகவானந்தம், மாதவன், திரு.எஸ்.டி.எஸ். மற்றும் அப்போதிருந்த மூத்த தலைவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். நான் அங்கே போய், ‘யார் இந்த ஆலோசனையைச் சொன்னது?' என்று அவர்களிடத்திலே சண்டை போட்டேன். பிறகு ஜெயலலிதா மாடியிலிருந்து இறங்கி வந்தார்.

அன்றைக்கு இங்கு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் அனைவருக்கும் தெரியும். வன்முறையைத் தொடர்ந்து சட்டமன்றத்திற்குள்ளே அடிதடி ரகளை எல்லாம் நடந்தது. பிறகு செல்வி. ஜெயலலிதா அவர்களை அழைத்துக் கொண்டு வண்டியிலே நானும், திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆரும் முன்னாலேயும், பின்னாலேயும் அமர்ந்து கொண்டு போகிறோம். வீடு போகிற வரை, ‘இன்றைக்கு மாலையே ஆட்சியை கலைக்கப் போகிறார்கள், ஆட்சியைக் கலைக்கப் போகிறார்கள்' என்று சொல்லிக் கொண்டே வந்தார்’’ - இதுதான் உண்மை.

banner

Related Stories

Related Stories