உலகம்

"உக்ரைன் அதிபரை மேற்கத்திய நாடுகளே கொல்ல வாய்ப்பு" -ரஷ்ய முன்னாள் அதிபர் கருத்தால் பரபரப்பு !

மேற்கத்திய நாடுகள் உக்ரைன் அதிபரை கொலை செய்ய வாய்ப்புள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"உக்ரைன் அதிபரை மேற்கத்திய நாடுகளே கொல்ல வாய்ப்பு" -ரஷ்ய முன்னாள் அதிபர் கருத்தால் பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒரு வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

"உக்ரைன் அதிபரை மேற்கத்திய நாடுகளே கொல்ல வாய்ப்பு" -ரஷ்ய முன்னாள் அதிபர் கருத்தால் பரபரப்பு !

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. , உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றுள்ளது.

இதற்கு இடையில் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்ளில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டி உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது. இந்த நிலையில், 2014-ம் ஆண்டில் இருந்து ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரீமியா பகுதியில் உள்ள ககோவ்ஸ்கா அணை தகர்க்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதலை நடத்தியது உக்ரைனா? ரஷ்யாவா ? என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில், இரு நாடுகளும் மற்றொரு நாடுகளை குறை கூறி வருகிறது. இந்த போரில் மக்கள் மட்டுமே தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில், தற்போது அணைகள் போன்றவையும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"உக்ரைன் அதிபரை மேற்கத்திய நாடுகளே கொல்ல வாய்ப்பு" -ரஷ்ய முன்னாள் அதிபர் கருத்தால் பரபரப்பு !

இதனிடையே உக்ரைனைக்கு மேற்கத்திய நாடுகள் பல மில்லியன் டாலர் அளவு ஆயுத உதவிகளை வழங்கியுள்ள நிலையில், இதன் காரணமாக மேற்கத்திய நாடுகள் உக்ரைன் அதிபரை கொலை செய்ய வாய்ப்புள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கருத்துக்களை மத்திவிட்டுள்ள அவர் "மேற்குலக நாடுகளிடம் இருந்து உக்ரைன் அதிகப்படியாக ஆயுதங்கள் மற்றும் பணத்தை வாங்கியுள்ளது. இதற்கு அந்த நாடுகளுக்கு அவர் எதையேனும் திரும்ப தரவேண்டும். இல்லையென்றால், அது உக்ரைன் அதிபர் ஜெலஸ்ன்கி உட்பட அனைவருக்கும் சிக்கலைத் தந்து அவர்கள் பதவியை மட்டுமல்ல, உயிரையே இழக்கவேண்டி இருக்கும். அமெரிக்கப் பணத்தை வீணடித்ததற்காக இந்த அமெரிக்க ஏஜெண்ட்கள் எல்லாம் ஒன்றிணைந்து உக்ரைன் அதிபரைத் தீர்த்துக் கட்டவும் வாய்ப்பு இருக்கிறது" என்றும் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories