உலகம்

ஆபத்தில் முடிந்த ஆசை.. உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் உயிரிழந்த 28 வயது பெண்!

ஸ்காட்லாந்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உடல் எடையை குறைக்கும் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபத்தில் முடிந்த ஆசை.. உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் உயிரிழந்த 28 வயது பெண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் இருக்கும் பெண்கள் சிலர் அழகுக்காக பல்வேறு விதமான அறுவை சிகிச்சைகளை செய்து கொள்கிறோர்கள். இதனால் அவர்கள் பல்வேறு உடல் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுகிறது.

அதேபோல் குண்டாக இருக்கும் பெண்களும் தன்னை ஒல்லியாக அழகாக மாறவேண்டும் என நினைத்து அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். இப்படி அறுவை சிகிச்சை செய்யும் போது உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்களும் நிகழ்கிறது.

ஆபத்தில் முடிந்த ஆசை.. உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் உயிரிழந்த 28 வயது பெண்!

இந்நிலையில் ஸ்காட்லாந்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உடல் எடையைக் குறைக்கும் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஷானன் போவ். 28 வயது இளம் பெண்ணான இவர் சற்று உடல் பருத்து காணப்பட்டுள்ளார். இதனால் அவர் தனது உடல் எடையை அறுவை சிகிச்சை மூலம் குறைக்க முடிவு செய்துள்ளார்.

ஆபத்தில் முடிந்த ஆசை.. உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் உயிரிழந்த 28 வயது பெண்!

அதன்படி துருக்கிக்குச் சென்று உடல் எடையைக் குறிப்பதற்காக அறுவை சிகிச்சை செய்தபோது அவர் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அந்நாட்டுச் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து ஷானன் போவின் காதலர் ரோஸ் ஸ்டிர்லிங், என்றென்றும் எப்போதும் உன்னை நேசிக்கிறேன் என பேஸ்புக்கில் இறங்கல் தெரிவித்துள்ளார். அதேபோன்று வாழ்க்கை மிகவும் கொடூரமானது. நீங்கள் எங்கள் இதயங்களில் என்றென்றும் இருப்பீர்கள் ஷானன் போவ்" என்று மற்றொரு நண்பர் இறங்கல் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories