
அமெரிக்காவின் நியூயார்க் பகுதியை சேர்ந்தவர் கிரிகோரி. சட்டப்படிப்பு முடிந்து இவர் நியூயார்க் நிதிமன்றத்தில் நீதிபதியாகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தன்னை குறிப்பிட்டு ஆபாசமானவன் என்று பதிவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இவரின் சமூக வலைதள பதிவுகள் சந்தேகத்துக்கிடமானதாக இருந்ததால் இவர் குறித்து விசாரணை நடத்தியபோது இவர் இரவில் இவர் ஆபாச பட நடிகராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இவர் நீதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவர் குறித்த விசாரணையில் பகலில் நீதிபதியாக பணியாற்றும் ஒருவர் இரவில் ஆபாச பட நடிகராக பணிபுரிந்து வருவதும் இதற்காக தனி சேனல் தொடங்கியுள்ளதும் தெரியவந்தது. 'ஒன்லி பேன்ஸ்' என்ற பெயரில் வலைத்தளம் நடத்திவரும் இவர் ரசிகர்களிடம் மாத சந்தா வசூலித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மாதம் 12 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 990 ரூபாய் ) வசூல் சையது வந்ததும் தனது சேனலில் 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை பதிவிட்டும் வந்துள்ளார். அதோடு இவரின் இந்த சேனலுக்காக வேறு பலரும் ஆபாச படங்களில் நடித்து வந்துள்ளதும் வெளிவந்துள்ளது.

இவர் குறித்து பேசிய நியூயார்க் நகர கவுன்சில் உறுப்பினர் ஒருவர், "நீதிபதி ஒருவர் ஆபாசமாக நடித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த நகரம் தனது பெரும்பாலான செயல்பாடுகளுக்கு நீதிமன்றங்களை நம்பி இருக்கிறது. அத்தகைய நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இவரின் செயல்பாடுகள் உள்ளது. இது போன்ற செயல்பாடுகள் நீதித்துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள நம்பக தன்மையை இழக்க செய்கிறது" என்று கூறியுள்ளார்.








