உலகம்

3,100 தொழிலாளர்களுக்கு 5 வருட சம்பளம் போனஸ்.. தைவான் கம்பெனியின் இந்த அதிரடிக்கு காரணம் என்ன தெரியுமா ?

தனது நிறுவனத்தின் பணியாற்றும் 3,100 தொழிலாளர்களுக்கு 5 வருட சம்பளத்தை போனஸாக அளித்து தைவான் நிறுவனம் ஆச்சரியப்படவைத்துள்ளது.

 3,100 தொழிலாளர்களுக்கு 5 வருட சம்பளம் போனஸ்.. தைவான் கம்பெனியின் இந்த அதிரடிக்கு காரணம் என்ன தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகம் முழுவதும் ஐ.டி நிறுவனங்களில் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஐ.டி நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதன் தாக்கம் ஐ.டி நிறுவனங்கள் மட்டுமல்லாது முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களாகக் கருதப்படும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களையும் பாதித்துள்ளது.அதன் வெளிப்பாடுதான் ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் முடிவுக்கு தள்ளியுள்ளது.

 3,100 தொழிலாளர்களுக்கு 5 வருட சம்பளம் போனஸ்.. தைவான் கம்பெனியின் இந்த அதிரடிக்கு காரணம் என்ன தெரியுமா ?

இந்த நிலையில், அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்துவரும் நிலையில், சீன நிறுவனமான ஹெனன் மைன் என்ற நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 72.48 கோடி ரூபாய் அளவு போனஸ் அளித்து ஆச்சரியப்படுத்தியது. அந்த வகையில் தற்போது தைவானை நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு போனஸ் தொகையை அள்ளிவீசி அதிரவைத்துள்ளது

சீனாவின் அருகில் இருக்கும் எவர் க்ரீன் என்ற நிறுவனம் சொந்தமாக மிகப்பெரிய கப்பல்களை இயக்கும் தொழிலை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் வருமானம் கடந்த வருடத்தில் மிகப்பெரிய அளவு இருந்த நிலையில், அதனை தொழிலாளர்களுடன் பகிர அந்த நிறுவனம் முடிவு செய்து அதன்படி தனது நிறுவனத்தின் பணியாற்றும் 3,100 தொழிலாளர்களுக்கு 5 வருட சம்பளத்தை போனஸாக அளித்து ஆச்சரியப்படவைத்துள்ளது.

 3,100 தொழிலாளர்களுக்கு 5 வருட சம்பளம் போனஸ்.. தைவான் கம்பெனியின் இந்த அதிரடிக்கு காரணம் என்ன தெரியுமா ?

இது தொடர்பாக வெளியான தகவலின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு நிதியாண்டில் எவர் க்ரீன் நிறுவனம் 16.25 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வருமானம் ஈட்டியுள்ளது. கொரோனா காலத்தில் நுகர்வோர் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததே அந்த நிறுவனத்தின் லாபம் இந்த அளவு உயர காரணம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories