உலகம்

நடுவானில் திக் திக் நிமிடம்.. திடீரென பற்றி எரிந்த விமானத்தின் இறக்கை: கூக்குரலிட்ட பயணிகள் - வீடியோ!

நடுவானில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தின் என்ஜினில் தீப்பற்றி எரியும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடுவானில் திக் திக் நிமிடம்.. திடீரென பற்றி எரிந்த விமானத்தின் இறக்கை: கூக்குரலிட்ட பயணிகள் - வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஸ்காட்லாந்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் ரக விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தின் எஞ்சின் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை கண்ட விமானி உடனே அவசர அவசரமாக பிரேஸ்டவிக் விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார். அங்குத் தயாராக இருந்த பாதுகாப்பு குழுவினர் பயணிகளைப் பத்திரமாக மீட்டுள்ள வெளியே கொண்டு வந்துள்ளனர்.

நடுவானில் திக் திக் நிமிடம்.. திடீரென பற்றி எரிந்த விமானத்தின் இறக்கை: கூக்குரலிட்ட பயணிகள் - வீடியோ!

இந்த விமானம் ஸ்காட்லாந்து விமான நிலையத்திலிருந்து புறப்படும் போது இன்ஜினில் சத்தம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இது வழக்கமாக விமானங்கள் புறப்படும் போது ஏற்படக்கூடிய சத்தம் என நினைத்து விமானி விமானத்தைத் தொடர்ந்து இயக்கியுள்ளார். நடுவானில் செல்லும்போதுதான் விமானத்தின் எஞ்சின் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்த பிபிசி பத்திரிகையாளர் லாரா பெட்டிக்ரூவ் கூறுகையில், "விமானம் புறப்பட்டபோது பலத்த சத்தம் கேட்டது. இருப்பினும் இது விமானங்கள் புறப்படும் போது ஏற்படும் சத்தம் என்றுதான் பயணிகள் அனைவரும் நினைத்தோம்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானி மற்றும் பணிப்பெண்கள் பதட்டத்துடன் இருந்தனர். பிறகுதான் விமானத்தில் தீப்பிடித்ததுள்ளது என்று கூறினார்கள். உடனே விமானம் அவசரமாகத் தரையிறங்கியது.

அப்போது தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்பு வீரர்கள் குழுவினர் எங்களை நோக்கி விரைந்து வந்தனர். எங்களது உடைகளை அப்படியே விட்டுவிட்டு உடனே விமானத்தில் இருந்து வெளியே செல்லவேண்டும் என கூறினார். இதனால் பயணிகள் குழப்பத்துடன் தங்களது உடைமைகளை விட்டு வெளியே சென்றனர்" என தெரிவித்துள்ளார்.

நடுவானில் விமானத்தின் எஞ்சின் தீ பற்றி எரியும் காட்சிகளை பயணிகள் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories