உலகம்

நீங்கள் முதலில் பதவி விலகுங்கள்.. போர்க் கொடி தூக்கிய தொழிலாளர் சங்கம்.. சுந்தர் பிச்சைக்கு சிக்கல் ?

கூகுள் நிறுவனத்தின் பணிநீக்கத்துக்கு பொறுப்பேற்று நீங்கள் ஏன் பதவி விலகக்கூடாது என சுந்தர் பிச்சைக்கு தொழிலாளர் சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.

நீங்கள் முதலில் பதவி விலகுங்கள்.. போர்க் கொடி தூக்கிய தொழிலாளர் சங்கம்.. சுந்தர் பிச்சைக்கு சிக்கல் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகம் முழுவதும் ஐ.டி நிறுவனங்களில் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.

கொரோனா காலத்தில் ஐ.டி நிறுவனங்கள் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டது. இதனால் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை கொரோனா என்ற இக்கட்டான காலத்திலும் வேலையிலிருந்து வெளியேற்றியது.

நீங்கள் முதலில் பதவி விலகுங்கள்.. போர்க் கொடி தூக்கிய தொழிலாளர் சங்கம்.. சுந்தர் பிச்சைக்கு சிக்கல் ?

மேலும் தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைபார்க்க வலியுறுத்தியது. கொரோனா தொற்று வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை இன்னமும் வீட்டிலிருந்தே வேலை பார்க்க வலியுறுத்தி வருகிறது. இதனால் ஊழியர்கள் மன மற்றும் உடல் ரீதியான பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஐ.டி நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதன் தாக்கம் ஐ.டி நிறுவனங்கள் மட்டுமல்லாது முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களாகக் கருதப்படும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களையும் பாதித்துள்ளது.

நீங்கள் முதலில் பதவி விலகுங்கள்.. போர்க் கொடி தூக்கிய தொழிலாளர் சங்கம்.. சுந்தர் பிச்சைக்கு சிக்கல் ?

அதன் வெளிப்பாடுதான் ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் முடிவுக்கு தள்ளியுள்ளது. ஃபேஸ்புக் தங்களது ஊழியர்களை 11000 பேரை நீக்குவதாக அறிவித்தது. ட்விட்டர் தங்களது ஊழியர்களின் 50%க்கும் அதிகமானவர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

அந்த வரிசையில் தற்போது கூகுள் நிறுவனமும் 12000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக தங்களது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சந்தர்பிச்சை அனுப்பிய அந்த மின்னஞ்சலில், "ஒரு கடினமான செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன். கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 12000 பேரை பணிநீக்கம் செய்ய நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த பணிநீக்கத்தால் நிறுவனத்தில் பாதிப்பு ஏற்படும். இதற்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்" என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கூகுள் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் முதலில் பதவி விலகுங்கள்.. போர்க் கொடி தூக்கிய தொழிலாளர் சங்கம்.. சுந்தர் பிச்சைக்கு சிக்கல் ?

இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் இந்த அறிக்கையை ஆல்ஃபாபெட் தொழிலாளர்கள் சங்கம் கண்டித்துள்ளது. மேலும், இந்த பணிநீக்கத்துக்கு பொறுப்பேற்று நீங்கள் ஏன் பதவி விலகக்கூடாது என்றும் தொழிலாளர் சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.

இது தொடர்பாக வெளியான செய்தியின்படி, சென்ற காலாண்டில் மட்டும் 1,700 கோடி ரூபாய் அளவுக்கு லாபத்தை ஈட்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் வருமானம் குறைவு என்பதை காரணம் காட்டி தொழிலாளர் பணிநீக்கத்தை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்துக்கு தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தான் பொறுப்பு, எனவே இதற்கு பொறுப்பேற்று சுந்தர் பிச்சை ஏன் ராஜினாமா செய்யக்கூடாது என தொழிலாளர் சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது. மேலும், தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த பல்வேறு நிறுவனங்களை கண்டித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories