உலகம்

சடலத்திற்குள் உயிரோடு இருந்த பாம்பு.. பதறியடித்து வெளியே ஓடிய உடற்கூறு ஆய்வு மருத்துவர்!

அமெரிக்காவில் உடற்கூறு ஆய்வின் போது சடலத்தில் பாம்பு ஒன்று உயிரோடு இருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சடலத்திற்குள் உயிரோடு இருந்த பாம்பு.. பதறியடித்து வெளியே ஓடிய உடற்கூறு ஆய்வு மருத்துவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜெசிக்கா லோகன். இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக உடற்கூறு ஆய்வு மருத்துவராக இருந்து வருகிறார். தனது பணியின் போது பல்வேறு விதமான சடலங்களுக்கு உடற்கூறு ஆய்வு செய்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் அவர் ஒரு சடலத்தை உடற்கூறு ஆய்வு செய்துள்ளார். அப்போது சடலத்தின் கால் தொடை பகுதியில் உயிருடன் ஒரு பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் பதறியடித்து உடற்கூறு ஆய்வு அறையை விட்டு வெளியே சென்றுள்ளார்.

சடலத்திற்குள் உயிரோடு இருந்த பாம்பு.. பதறியடித்து வெளியே ஓடிய உடற்கூறு ஆய்வு மருத்துவர்!

அதோடு, பாம்பை பிடித்த பிறகே மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்வேன் என தெரிவித்துள்ளார். பிறகு பாம்பைப் பிடித்து வெளியே எடுத்து சென்ற பிறகே அவர் மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்துள்ளார். இந்த அனுபவம் குறித்து மருத்துவர் ஜெசிக்கா லோகன் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இவரின் இந்த திகில் அனுபவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சடலத்திற்குள் உயிரோடு இருந்த பாம்பு.. பதறியடித்து வெளியே ஓடிய உடற்கூறு ஆய்வு மருத்துவர்!

அந்த உடல் ஒரு ஓடையிலிருந்து கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் பாம்பு உடலுக்குள் புகுந்திருக்க வாய்ப்புள்ளதாக உடற்கூறு ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories