உலகம்

அடுத்தடுத்து சரிந்து விழுந்த 57 பள்ளி மாணவர்கள்..கடத்தல் கும்பல் அட்டகாசம்.. இறுதியில் வெளிவந்த உண்மை !

பள்ளி மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்ட நிகழ்வில் 57 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து சரிந்து விழுந்த 57 பள்ளி மாணவர்கள்..கடத்தல் கும்பல் அட்டகாசம்.. இறுதியில் வெளிவந்த உண்மை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மெக்சிகோவின் தெற்கு பகுதியில் சியாபாஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. அங்குள்ள மேல்நிலை பள்ளி ஒன்றில் வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பள்ளி மாணவர்கள் பலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

மொத்தம் 57 மாணவர்கள் மயக்கமடைந்ததால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிருவாகம் அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை நடைபெற்றதால் மாணவர்களுக்கு விஷம் கொடுத்துள்ளது தெரியவந்தது.

அடுத்தடுத்து சரிந்து விழுந்த 57 பள்ளி மாணவர்கள்..கடத்தல் கும்பல் அட்டகாசம்.. இறுதியில் வெளிவந்த உண்மை !

இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், 2 வாரங்களில் மேலும் 2 பள்ளி மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது போதை மருந்து கடத்தல் கும்பலாக இருக்கலாம் என போலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மெக்சிகோவில் போதைபொருள் கடத்தல் கும்பல் அதிகரித்திருப்பதும் அதன் கட்டுப்பாட்டில் பல இடங்களும் இருக்கின்றன. அந்நாட்டு அரசு இந்த கும்பல்களின் அட்டகாசத்தை அடக்க பலமுறை முயன்ற நிலையில் அது நடக்காமல் இருந்தும் வருகிறது. இந்த கும்பல்களுக்கு இடையே நடக்கும் சண்டையில் பலர் தொடர்ந்து உயிரிழந்து வருவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories