உலகம்

இலங்கை : கிரிக்கெட் போட்டியை காண சென்ற ஓட்டுநர்கள்.. காதலியை பார்க்க அரசு பேருந்தை திருடிய சிறுவன் !

காதலியை பார்க்க போக்குவரத்து எதுவும் இயங்கவில்லை என்பதால் அரசு பேருந்தை திருடிய காதலன் செயல் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை : கிரிக்கெட் போட்டியை காண சென்ற ஓட்டுநர்கள்.. காதலியை பார்க்க அரசு பேருந்தை திருடிய சிறுவன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இலங்கை பிலியந்தலை என்ற பகுதியில் உள்ள பேருந்து டிப்போவில் நேற்றைய முன் தினம் பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர்கள் சிலர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண சென்று விட்டனர்; அதோடு மற்ற சிலர் உணவு வாங்க சென்றுள்ளார்கள்.

அந்த சமயத்தில் பேருந்து டிப்போவிற்கு வந்த மர்ம நபர் ஒருவர் பேருந்தை திருடி சென்றுள்ளார். அப்போது எதேர்ச்சியாக டெப்போவிற்கு திரும்பிய பேருந்து ஓட்டுநர் ஒருவர் பேருந்து திருடு போனதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார். மேலும் சத்தமிட்டு அனைவரையும் அழைத்துள்ளார்.

இலங்கை : கிரிக்கெட் போட்டியை காண சென்ற ஓட்டுநர்கள்.. காதலியை பார்க்க அரசு பேருந்தை திருடிய சிறுவன் !

அதோடு அவர் இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து விசாரணை மேற்கொண்டதில் கெஸ்பேவ - பிலியந்தலையில் இருக்கும் சோதனை சாவடியில் பகுதியில் அந்த பேருந்து சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த பேருந்தை அதிகாரிகள் மடக்கிய போது, அதிலிருந்த இளைஞர் தப்பியோடியுள்ளார். தொடர்ந்து அவரை மடக்கி பிடித்த அதிகாரிகள் பேருந்தை மீட்டதோடு, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இலங்கை : கிரிக்கெட் போட்டியை காண சென்ற ஓட்டுநர்கள்.. காதலியை பார்க்க அரசு பேருந்தை திருடிய சிறுவன் !

அப்போது அந்த இளைஞர் கூறியதை கேட்டு அதிர்ந்தனர். அதாவது, தனது காதலியை பார்ப்பதற்காக அந்த இளைஞர் கிளம்பி வந்துள்ளார். ஆனால் அப்போது பேருந்து எதுவும் இயங்காததால் நேராக டெப்போவுக்கு சென்றுள்ளார். அங்கே பேருந்து ஒன்று சாவியுடன் இருந்துள்ளது. தனது காதலியை பார்க்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்த அவர், பேருந்தை எடுத்து சென்றுள்ளார். பின்னர் காதலியை சந்தித்து விட்டு திரும்பி வரும் வழியில் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டுள்ளார்.

பிறகு அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். காதலியை பார்ப்பதற்காக அரசு பேருந்தை திருடிய இளைஞரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories