உலகம்

பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள்.. கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் 10 பேர் பலி !

லாரி மோதி பள்ளி சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள்.. கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் 10 பேர் பலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் ஆரம்பப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வகுப்பை முடித்து பள்ளிக்குழந்தைகள் 20 பேர் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தம் நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது, அந்த சாலையில் அதிவேகமாக வந்த ஒரு லாரி, கட்டுப்பாட்டை இழந்து பள்ளிக்குழந்தைகள் மீது அதிவேகத்தில் மோதி பின்னர் அங்கிருந்த மின்கம்பம் மீது மோதியது. லாரி மோதிய வேகத்தின் மின்கம்பம் சரிந்து சாலையில் வந்துகொண்டிருந்த வேன் மீது விழுந்தது.

பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள்.. கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் 10 பேர் பலி !

இந்த கொடூர விபத்தில் பள்ளிக் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். அதேபோல மின்கம்பம் விழுந்த வேனில் இருந்த ஓட்டுநரும் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுவர்கள் சிகிச்சைக்காக அந்த பகுதியில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories