இந்தியா

மிரட்டி பாலியல் வன்கொடுமை.. 8-ம் வகுப்பு மாணவிக்கு தலைமையாசிரியர், ஆங்கில ஆசிரியரால் நேர்ந்த சோகம் !

8-ஆம் வகுப்பு சிறுமியை மிரட்டி பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆங்கில ஆசிரியர் ஆகியோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிரட்டி பாலியல் வன்கொடுமை.. 8-ம் வகுப்பு மாணவிக்கு தலைமையாசிரியர், ஆங்கில ஆசிரியரால் நேர்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

குஜராத் அருகே டையு டாமன் யூனியன் பிரதேசம் அமைந்துள்ளது. இங்குள்ள சில்வசா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவி ஒருவர் மும்பையில் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது இரவில் தூங்கிக்கொண்டிருந்தவர் பயந்து நடுங்கியுள்ளார். இதைக் கவனித்த அவரின் உறவினர் இதுகுறித்து அந்த சிறுமியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் கூறியதைக் கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மிரட்டி பாலியல் வன்கொடுமை.. 8-ம் வகுப்பு மாணவிக்கு தலைமையாசிரியர், ஆங்கில ஆசிரியரால் நேர்ந்த சோகம் !

அந்த சிறுமி படித்து வரும் பள்ளியில் தலைமை ஆசிரியரும், ஆங்கில ஆசிரியரும் சேர்ந்து அவரை மிரட்டி சுமார் 6 மாதங்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும் இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாக அவர்கள் மிரட்டியதும் இதனால் தனது பெற்றோர்களிடம் கூட இது குறித்து கூறாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் சிறுமியின் உறவினர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இந்த வழக்கு டையு டாமன் காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய போலிஸார் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிளாடியோ நூனஸ் (57) மற்றும் ஆங்கில ஆசிரியர் லெஸ்டர் டி கோஸ்டா (23) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories