உலகம்

பூமியில் இருந்து பகலில் தெரிந்த வெளிச்சம்.. ஆச்சரியத்தோடு விண்வெளியில் இருந்து ட்வீட் போட்ட ASTRONAUT !

மனிதனால் உருவாக்கப்பட்ட வெளிச்சம் ஒன்று பகலில் விண்வெளியில் இருந்து பார்த்தால் கூட தெரிகிறது என விண்வெளி வீராங்கனை ஒருவர் கூறியுள்ளார்.

பூமியில் இருந்து பகலில் தெரிந்த வெளிச்சம்.. ஆச்சரியத்தோடு விண்வெளியில் இருந்து ட்வீட் போட்ட ASTRONAUT !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாம் சிறுவயதாக இருக்கும்போது விண்வெளியில் இருந்து பார்த்தால் தெரியும் (மனிதனால் கட்டப்பட்ட) ஒரே பொருள் சீனபெருஞ்சுவர் என்று பலர் சொல்வதை கேட்டுருப்போம். நம்மில் பலர் அதை தற்போது வரை உண்மை என்றே நம்பியும் இருப்போம்.

ஆனால், அந்த தகவல் பொய் என விண்வெளி வீரர்கள் பலர் விளக்கமளித்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதில் உச்சமாக சீனாவின் முதல் விண்வெளி வீரர் யாங் லிவி 2003 ஆண்டு விண்வெளிக்கு சென்றபோது வரலாற்று சிறப்புமிக்க சீனப்பெருஞ்சுவரை விண்வெளியில் இருந்து பார்க்க இயலவில்லை என்று கூரினார்.

பூமியில் இருந்து பகலில் தெரிந்த வெளிச்சம்.. ஆச்சரியத்தோடு விண்வெளியில் இருந்து ட்வீட் போட்ட ASTRONAUT !

இந்த நிலையில், தற்போது மனிதனால் உருவாக்கப்பட்ட வெளிச்சம் ஒன்று பகலில் விண்வெளியில் இருந்து பார்த்தால் கூட தெரிகிறது என விண்வெளி வீராங்கனை ஒருவர் கூறியுள்ளார். இத்தாலி நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "நெகேவ் பாலைவனத்தில் ஒரு பிரகாசமான புள்ளி. பகலில் மனிதனால் உருவாக்கப்பட்ட விளக்குகளைப் பார்ப்பது மிகவும் அசாதாரணமானது. சூரியனில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பெறுவதற்கான தொழில்நுட்பங்களில் ஒன்றாக இந்த சூரிய மின் உற்பத்தி நிலையம் உள்ளது'' எனக் கூறியுள்ளார்.

அவர் கூறியது இஸ்ரேலில் உள்ள நெகேவ் பாலைவனத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையமாகும். அங்கிருந்து வெளியாகும் வெளிச்சம் விண்வெளிவரை தெரிவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories