உலகம்

நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட 2 விமானங்கள்.. அமெரிக்காவில் நடந்த பயங்கர விபத்து!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட 2 விமானங்கள்.. அமெரிக்காவில் நடந்த பயங்கர விபத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளூர் விமான நிலையம் உள்ளது. இங்கு நேற்று இரண்டு விமானங்கள் தரையிறங்க முயன்றுள்ளன. அப்போது இந்த இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் இரண்டு விமானங்களும் சுக்குநூறாக உடைந்துகொண்டே கீழே விழுந்துள்ளன. இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற விபரங்களும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட 2 விமானங்கள்.. அமெரிக்காவில் நடந்த பயங்கர விபத்து!

இந்த விபத்து குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் நடுவானில் 2 விமானங்கள் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories