இந்தியா

சொகுசு ஆடி காரில் ஆம்புலன்ஸ் சைரனுடன் ROUND - முன்னாள் MP-யின் மருமகனுக்கு ஆப்படித்த போலிஸார் !

சொகுசு ஆடி காரில் ஆம்புலன்ஸ் சைரனுடன் வலம் வந்த முன்னாள் எம்.பியின் மருமகனுக்கு போக்குவரத்து போலிஸார் ரூ.28 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

சொகுசு ஆடி காரில் ஆம்புலன்ஸ் சைரனுடன் ROUND - முன்னாள் MP-யின் மருமகனுக்கு ஆப்படித்த போலிஸார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநிலம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நாகமங்கலா தொகுதியின் முன்னாள் எம்.பி சிவராமகவுடா. இவர் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து நாகமங்கலா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இவரின் மருமகன் ராஜீவ் ரத்தோர் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இவர் விஜயநகரத்தில் தனது சொகுசு ஆடி காரில் ஆம்புலன்ஸ் சைரனுடன் வலம் வந்துள்ளார். இதனை அவரின் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதன் பின்னர் இது தொடர்பாக போக்குவரத்து காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விதிகளை மீறியதாக ராஜீவ் ரத்தோருக்கு விஜயநகரம் போக்குவரத்து போலிஸார் ரூ.28 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ராஜீவ் ரத்தோட் பயன்படுத்திய கார் முன்னாள் எம்.பி சிவராம கவுடாவுக்கு சொந்தமான ராயல் கான்கார்ட் கல்வி நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories