உலகம்

honeymoon சென்ற இடத்தில் வாக்குவாதம்.. மனைவியை அடித்து கொன்ற கணவன்.. கழிவறையில் பூட்டிய அவலம் !

தேனிலவு சென்ற இடத்தில் கணவனே மனைவியை கொலை செய்து கழிவறையில் போட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

honeymoon சென்ற இடத்தில் வாக்குவாதம்.. மனைவியை அடித்து கொன்ற கணவன்.. கழிவறையில் பூட்டிய அவலம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவிலுள்ள டென்னசி மாகாணத்தில் வசித்து வருபவர் பிரிட்லி ராபர்ட் டாசன் (39). இவருக்கும் கிரிஸ்டி சென் என்ற இளம்பெண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் தனியாக வெளியே சென்று வர வேண்டும் என்று விரும்பியதால், கடந்த 7ம் தேதி ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஃபிஜி நாட்டிலுள்ள ட்ரூட்லி என்ற தீவுக்கு சென்றுள்ளனர்.

மேலும் அங்கே தங்களது தேனிலவையும் கொண்டாடுவதற்காக ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஒரே அறையை எடுத்து தங்கினர்.

honeymoon சென்ற இடத்தில் வாக்குவாதம்.. மனைவியை அடித்து கொன்ற கணவன்.. கழிவறையில் பூட்டிய அவலம் !

சம்பவத்தன்று இருவரும் ஆரம்பத்தில் நன்றாக சிறிது பேசி கொண்டிருந்தனர். சில நேரங்களிலேயே இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மனைவி கிரிஸ்டினா அவரது அறையிலிருக்கும் கழிவறைக்கு சென்று மயங்கி விழுந்துள்ளார்.

இதனை கண்ட கணவர் ராபர்ட், கிரிஸ்டினாவை எழுப்ப முயற்சித்த போது அவர், மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார். மேலும் நாடி துடிப்பை பரிசோதனை செய்ததில், அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ராபர்ட், அவரது அறையின் கதவை திறக்கவே இல்லை. காலை உணவு, மதிய உணவு என்று எதுவும் உண்ணவில்லை. இதனால் ஹோட்டலின் ஊழியர் ஒருவர் இவரிடம் பேச முயற்சித்த போதும் கதவை திறக்கவே இல்லை.

honeymoon சென்ற இடத்தில் வாக்குவாதம்.. மனைவியை அடித்து கொன்ற கணவன்.. கழிவறையில் பூட்டிய அவலம் !

இப்படி அதிக நேரம் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த ஹோட்டல் நிர்வாகம், வேறு சாவியை கொண்டு அந்த அறையை திறந்துள்ளனர். அப்போது கிரிஷ்டினா இரத்த வெள்ளத்தில் கழிவறையில் பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்ட ஹோட்டல் நிர்வாகிகள், உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், அவரது சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

honeymoon சென்ற இடத்தில் வாக்குவாதம்.. மனைவியை அடித்து கொன்ற கணவன்.. கழிவறையில் பூட்டிய அவலம் !

இதனிடையே கிரிஸ்டினாவின் கணவரான ராபர்ட்டை காவல்துறையினர் தேடி வந்தனர். அப்போது அவர் அந்த தீவில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு தப்பியோடியுள்ளது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்த தீவில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இருக்கும் மற்றொரு தீவில் சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் இருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்று பார்க்கையில், தப்பி சென்ற ராபர்ட் அங்கிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

honeymoon சென்ற இடத்தில் வாக்குவாதம்.. மனைவியை அடித்து கொன்ற கணவன்.. கழிவறையில் பூட்டிய அவலம் !

இதையடுத்து ராபர்ட்டை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனிலவு சென்ற இடத்தில் மனைவியை கணவனே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories