அரசியல்

“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!

வெள்ளை அறிக்கை என்ற பெயரில் தாங்கள் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என வெளிப்படையாக அறிவிக்கிறதா தவெக அரசு என முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம்.

“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை நேற்று (ஜூன் 16) வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன், இதில் வழக்கம்போல் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல், தங்கள் அளித்த கவர்ச்சியான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என அறிந்து அதற்கு சப்பை கட்டு கட்டும் ஒரு அறிக்கை தான் இவர்கள் வெளியிட்ட வெள்ளை அறிக்கை என்றே கூறவேண்டும்.

இதுகுறித்து இன்று (ஜூன் 17) விரிவான விளக்கத்துடன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,

தமிழ்நாட்டில் வெள்ளை அறிக்கை வெளியிடுவது புதிதல்ல. அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது மூன்றாவது முறையாகும்.

அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில், அதற்கு முன்பிருந்த 1991 முதல் 2001 வரையிலான 10 ஆண்டுகால நிதிநிலை குறித்து விவரிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், 15 ஆண்டுகால நிதிநிலையை கணக்கில் எடுத்துக்கொண்டு வெள்ளை அறிக்கை வெளியிட்டோம்.

ஆனால் இவர்கள் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை வெறும் 5 ஆண்டுகாலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது. திமுக ஆட்சியை மட்டும் சொல்ல வேண்டிய காரணம் என்ன?”

தவெக அரசு, திமுக ஆட்சிக் காலத்தை மட்டும் மையமாக வைத்து வெள்ளை அறிக்கை வெளியிட்டது ஏன்? யாரை காப்பாற்றுவதற்காக இந்த வெள்ளை அறிக்கையில் அதிமுக ஆட்சிக் கால விவரங்கள் இடம்பெறவில்லை? தீர்ந்து போனதாக சொல்லப்படுபவர்களை கவர்வதற்காகவே இதை செய்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!

திமுக வெள்ளை அறிக்கை வெளியிட்ட போதும், ‘நிதிநிலை எதுவாக இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்’ என்பதை தெளிவாக தெரிவித்தோம்.

ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையின் முக்கிய நோக்கமே, புதிய திட்டங்களை செயல்படுத்த நிதிப் பற்றாக்குறை உள்ளது என்பதை ஆரம்பத்திலேயே கூறுவதாக உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று தவெக அரசு கைவிரித்துள்ளது.

ஆழம் தெரியாமல் காலை விட்டு, நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை மக்கள் மன்றத்தில் வழங்கி, மக்களை நம்ப வைத்து ஏமாற்றி ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டார்கள். தற்போது அந்த தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

நிதிநிலையில் எவ்வளவு நெருக்கடி இருந்தாலும், கொடுத்த வாக்குறுதிகளை திமுக ஆட்சி நிறைவேற்றியது. ஆனால் தவெக ஆட்சியோ, நிதி நெருக்கடியை காரணம் காட்டி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என கூறுகிறது. சிறந்த ஆட்சியாளர்கள் யார் என்பதை மக்கள் தான் சிந்திக்க வேண்டும்!

தவெக அரசு தனது ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்தால், இந்த ஆட்சியின் முடிவில் மாநிலத்தின் மொத்தக் கடன் ரூ.20 லட்சம் கோடியை தொடும் என்பதை நான் சவாலாக சொல்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் திமுக ஆட்சியில் பெறப்பட்ட சராசரி கடனை விட, தற்போதைய அரசு குறைவாக கடன் வாங்கினால் நான் வகிக்கும் பொறுப்பில் இருந்து விலகத் தயாராக இருக்கிறேன் என சவால் விடுத்துள்ளார்.

“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!

மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையாக ரூ.11 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. ஒன்றிய அரசின் நிதி குறைப்பு காரணமாகவே வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால் வெள்ளை அறிக்கையில் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையே குறிப்பிடப்படவில்லை. நிதி மேலாண்மையை சரியாக செய்யாததால்தான் கடன் அதிகரித்தது என்ற பொய்யான பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சிக்கிறார்கள் என தெரிவித்தார்.

“நிதியமைச்சர் அவர்களே, நிதிப் பற்றாக்குறைக்கு என்ன காரணம் என்பதை சொல்ல வேண்டாமா? மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் போன்ற திட்டங்களை தற்போதைய தவெக அரசு நிறுத்திப் பார்க்க முடியுமா? அவற்றை நிறுத்தி, அந்த நிதியை வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப் போகிறோம் என்று சொல்லும் தைரியம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய தங்கம் தென்னரசு,

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியதால்தான் கடன் உருவாகியுள்ளது. புதிய அரசு அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்த ரூ.6 லட்சம் கோடி தேவைப்படும். எனவே, முதலில் உங்கள் திட்டங்களை நிறைவேற்றிவிட்டு அதன் பிறகு கடன் பற்றி பேசுங்கள்.

எங்களிடம் எந்த புதிய திட்டங்களும் இல்லை. எங்களால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று சொல்வதுதான் இந்த வெள்ளை அறிக்கை. ஆட்சியாளர்களின் இயலாமையை மூடி மறைப்பதற்காக இந்த வெள்ளை அறிக்கை என்ற வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளனர் என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories