உலகம்

ஆபிரகாம் லிங்கனின் முதல் ஜார்ஜ் ஃப்ளாய்டு வரை.. அமெரிக்காவில் தொடரும் நிறவெறி!

ஆபிரகாம் லிங்கனின் தலையை துளைத்த தோட்டாவுக்கு பின்னால் நிறவெறி ஒடுக்குமுறை இருக்கிறது.

ஆபிரகாம் லிங்கனின் முதல் ஜார்ஜ் ஃப்ளாய்டு வரை.. அமெரிக்காவில் தொடரும் நிறவெறி!
 • Twitter
 • Facebook
 • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

உலகின் ஜனநாயகமான நாடென கருதப்படும் நாடு அமெரிக்கா. எல்லாருக்கும் சம உரிமை கொடுத்திருப்பதாக இன்றுமே மார்தட்டும் நாடு அமெரிக்கா. அத்தகைய அமெரிக்காவிலேயே உள்நாட்டு போர் மூண்டது 1861ம் ஆண்டில். காரணம், நிறவெறி!

625000 உயிர்களை பறித்த போர் அமெரிக்காவுக்குள்ளேயே மூண்டதற்கு காரணம் மனிதனின் உச்சக்கட்ட பிற்போக்கான கருதப்படும் நிறவெறி! அமெரிக்க மாகாணங்களுக்கு இடையே 1861லிருந்து 1865ம் ஆண்டு வரை நடந்த உள்நாட்டு போருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் சிவில் வார். முதல் உலகப்போருக்கு முன் மேற்குலகில் பெருமளவுக்கான அழிவை ஏற்படுத்திய போர், அமெரிக்காவின் சிவில் வாரென வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.

ஆபிரகாம் லிங்கனின் முதல் ஜார்ஜ் ஃப்ளாய்டு வரை.. அமெரிக்காவில் தொடரும் நிறவெறி!

புகழ்பெற்ற அமெரிக்க ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் 1860ம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் தேர்வுக்கு முன் வரை அமெரிக்காவில் அடிமை முறை இருந்தது.

கறுப்பினத்தவரை மனிதச்சமூகமாக அங்கீகரிக்காமல் உழைப்புக்காக விற்கப்படும் மிருகநிலையில் அமெரிக்கா வைத்திருந்தது. ஆபிரகாம் லிங்கனின் தலைமையிலான அரசு அடிமை முறையை ஒழிக்க முதன்முறையாக முன்னெடுப்புகளை எடுத்தது. பெரும் கண்டனங்கள் எழுந்தன.

ஆபிரகாம் லிங்கனின் முதல் ஜார்ஜ் ஃப்ளாய்டு வரை.. அமெரிக்காவில் தொடரும் நிறவெறி!

அடிமை முறை ஒழிக்கப்படுவதற்கு அமெரிக்காவின் ஏழு தெற்கு மாகாணங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிவதாக அறிவித்து போர் தொடுத்தன. அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து அமெரிக்க கூட்டமைப்பு என வேறொரு பெயரில் தங்களை தனி நாடாக அறிவித்துக் கொண்டன. அமெரிக்க ஒன்றியம் கொண்டு வந்த அடிமை முறை ஒழிப்பை எதிர்த்து அமெரிக்காவின் மாகாணங்களால் தொடுக்கப்பட்ட போரே அமெரிக்க சிவில் வார். அப்போரில் அமெரிக்க ஒன்றியம் ஜெயித்தது. அடிமை முறையை ஆதரித்த மாகாணங்கள் ஒடுக்கப்பட்டன. ஆபிரகாம் லிங்கன் விரும்பியபடி அடிமை முறை ஒழிப்பு அமலுக்கு வந்தது.

வரலாற்றில் மிக அதிகமான புகழுக்கு உரித்தான அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கொல்லப்பட்டதற்கு காரணம் அவர் அடிமைமுறையை ஒழித்ததே.

ஆபிரகாம் லிங்கனின் முதல் ஜார்ஜ் ஃப்ளாய்டு வரை.. அமெரிக்காவில் தொடரும் நிறவெறி!

கறுப்பினத்தவர் அடிமைகளாக இருக்க வேண்டியதில்லை என அறிவித்ததற்காகவே ஆபிரகாம் லிங்கன் கொல்லப்பட்டார். அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், அதை வழங்கியதற்காகவே ஒரு மாபெரும் தலைவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதையும் சேர்த்துதான் அமெரிக்க சமூகத்தை அவதானிக்க வேண்டியிருக்கிறது.

ஆபிரகாம் லிங்கனின் தலையை துளைத்த தோட்டாவுக்கு பின்னால் நிறவெறி ஒடுக்குமுறை இருக்கிறது. அந்த தோட்டாவை உமிழ்ந்து துப்பாக்கி இன்னும் புகை தணியாமல் இருப்பதற்கு இன்னும் பல சாட்சிகள் அச்சமூகத்தில் நேர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஒரு காவலர் கழுத்தில் கால் வைத்து அழுத்தி ‘I can't breathe' எனக் கதறியும் காலெடுக்கப்படாமல் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டு அத்தகைய ஒரு சாட்சியே.

banner

Related Stories

Related Stories